Header Ads



''பௌத்த வாக்குகள், இரண்டாக பிரிந்துவிட்டது'' முஜிபுர் ரஹ்மான்

யுத்தத்திற்கு பின்னர் நாட்டுநலனை புறந்தள்ளி நடந்தமையினாலேயே ஜனாதிபதியின் வாக்கு வங்கி வங்குரோத்தடைந்துள்ளது என தெரிவித்த மேல்மாகாண சபை ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினரும் மத்திய கொழும்பு அமைப்பாளருமான முஜிபுர் ரஹ்மான், இதனாலேயே இந்தியாவிலிருந்து ஹெலிவூட் நடிகர் சல்மான்கானை அழைத்து வந்து பிரச்சாரம் மேற்கொள்ளும் நிலைமைக்கு ஆளும் கட்சி தள்ளப்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு 12 மெசன்ஜர் வீதியில் நேற்று  இரவு இடம்பெற்ற தேர்ல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவங் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

பாதாளத்தை நோக்கி புறப்பட்டுக்கொண்டிருக்கும் நாட்டை மீட்டெடுக்கும் போராட்டத்தை நாம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றோம். இந்த நாட்டை வெளிநாட்டு கெசினோ காரர்களுக்கு விற்க முற்பட்டபோது நாம் வீதிக்கு இறங்கினோம். அத்தோடு அப்பாவி மக்களின் காணிகளை அபகரித்து சினாவுக்கும் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் விற்கின்றனர். இதனை நிறத்தும் போராட்டத்தை நாம் முன்னின்று மேற்கொண்டோம். இன்று ஊழல் மோசடி குடும்பத்திடமிருந்து நாட்டை மீட்டெடுக்கும் நல்லாட்சிக்கான போராட்டத்தையே மேற்கொள்கிறோம். 

அன்று ஒரு கருத்து, இன்றொரு கருத்து என்று இல்லாது நாம் ஒரே சிந்தனையுடனும் சமூக நலன்களுக்காகவும் உழைப்பதை மக்கள் அங்கீகரித்துள்ளனர். இதனால் கடந்த தேர்தலின்போது ஐக்கிய தேசிய கட்சியின் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு பெரு அதிகளவான வாக்குகளை கொடுத்து  அவர்களை ஊக்குவித்தனர். மக்களின் நிலைப்பாட்டிற்கு ஏனைய முஸ்லிம் அரசியல்வாதிகளையும் தள்ளிவிட்டனர். 

யுத்தத்தம் நிறைவடைந்ததையடுத்து இந்த ஜனாதிபதியை தோற்கடிக்க முடியாது என்கிற நிலமை இருந்தது. இன்னும் பல வருடங்கள் இவரே நாட்டின் தலைவராக இருப்பார் என அப்தோது சொல்லப்பட்டது. என்றாலும் 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதியின் வெற்றிக்காக பாடுபட்ட சுதந்திர் கட்சியின் முக்கியஸ்தர்களும் ஜாதிக ஹெல உறுமய, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உட்பட பலர் இன்று அவரை வீழ்த்துவதற்கு முன்வந்துள்ளனர். 

முஸ்லிம் காங்கிரஸும் மலையக தமிழ் கட்சிகளும் அவரை விட்டு பிரிந்துவிட்டது. இன்று வடக்கு, கிழக்கு, தெற்கு, ரஜரட்ட, மேற்கு, மலையகம் என எல்லா தரப்பும் மைத்திரிக்கு சாதகமாகியுள்ளது.

இதற்கு காரணம் மஹிந்த குடும்பத்தின் ஊழல் ஆட்சியாகும். இவர்கள் முன்னெடுத்த அபிவிருத்திப்பணிகள் மக்களுக்கு பயணளிக்கவில்லை. ஜனாதிபதியின் குடும்பத்தினருக்கே பயனுள்ளதாக அமைந்தது. அத்தோடு பௌத்த வாக்குகளை மட்டும் நம்பய ஆட்சியாளர்கள் மதவாதத்தை பறப்பினர். ஆனால் தற்போது ஜாதிக ஹெல உறுமய எதிரணியில் இணைந்துகொண்டமையால் பௌத்த வாக்குகள் இரண்டாக பிரிந்துவிட்டது. இந்நிலையில் சிறுபான்மையின மக்களே இன்று தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்றனர்.

சிறுபான்மையினருக்கு இந்த ஆட்சியில் ஏற்பட்ட அசௌகரியங்கள் காரணமாக அவர்கள் மஹிந்தவை தோற்கடிக்க தருனம் பார்த்துக்கொண்டிருந்தனர். எனவே இன்று மஹிந்த ராஜபக்ஷவின் தோல்வி உறுதியாகிவிட்டது என்றார். 

No comments

Powered by Blogger.