Header Ads



அந்நபவிய்யா அறபுக் கல்லூரி புதிய மாணவிகளை வரவேற்றலும், பரிசளிப்பு நிகழ்வும்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மஃஹதுஸ்ஸுன்னா அந்நபவிய்யா மகளிர் அறபுக் கல்லூரியில் புதிய மாணவிகளை வரவேற்றலும் பரிசளிப்பு நிகழ்வும்

காத்தான்குடி மஃஹதுஸ்ஸுன்னா அந்நபவிய்யா மகளிர் அறபுக் கல்லூரியில் 2015 புதிய கல்வியாண்டில் ஷரீஆ மற்றும் ஹிப்ழுல் குர்ஆன் பிரிவுகளில் புதிதாக இணைந்து கொள்ளவுள்ள மாணவிகளை வரவேற்கும் நிகழ்வும் 2014 கல்வியாண்டில் அதிவிஷேட சித்திபெற்ற மாணவிகளை பாராட்டும் நிகழ்வும் கடந்த 2014.12.30ம் திகதி புதிய கடற்கரை வீதியில் அமைந்துள்ள கடாபி பீச் கார்டன் வலீமா மண்டபத்தில் நடைபெற்றது.

கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க். எம்.ஏ.ஸீ. ஸெய்னுலாப்தீன் (மதனி) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக மௌலவி. ஐ.எல்.எம். முஸ்தபா (பஹ்ஜி), வைத்திய கலாநிதிகளான எம். அஸ்லம், சுஆதா காஸிம் ஆகியோர் கலந்து கொண்டதுடன் கல்லூரியின் ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் நிருவாக உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.


No comments

Powered by Blogger.