Header Ads



அரசாங்கம் மீது, ரவூப் ஹக்கீம் குற்றச்சாட்டு


ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவை ஆதரித்து புத்தளம் நகரில் புதன்கிழமை (31/12/2014) மாலை  நடைபெற்ற பாரிய தேர்தல் பிரசார கூட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கலந்துகொண்டு உரையாற்றினார். 

அப்பாவி கிராமப் புற சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் நாடு பிளவுபடபோகின்றது என அச்சத்தை எற்படுத்தி அவர்களது வாக்குகளை கவர்வதற்காக அரசாங்க அமைச்சர்கள் போலிப்பிரசாரங்களில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வருவதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் குற்றம் சாட்டினார்.

முன்னதாக கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊர்வலத்திலும் அவர் பங்குபற்றினார். இதில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முத்தலிப்பாவா பாரூக், மாகாணசபை உறுப்பினர்களான நியாஸ், ரயீஸ் ஆகியோர் உட்பட கட்சியின் ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


No comments

Powered by Blogger.