Header Ads



தலைமைத்துவ விசுவாசத்துக்காக சமூகத்தை அடகுவைக்க முடியாது - ஆரீப் சம்சுதீன்

-எம்.வை.அமீர்-

தாங்கள் இணைந்திருந்த மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஆட்சியில் பாரியளவில் முஸ்லிம்கள் நெருக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் முஸ்லிம்களுக்கு எதிரான போக்கில் உள்ள பொதுபல சேனாவை பாதுகாத்து வரும் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஆட்சியில் இருந்து மக்கள் விடுபடுவதற்கு காத்துக் கொண்டிருந்ததாகவும்,அதற்க்கான வாய்ப்பை மகிந்த ராஜபக்சவே ஏற்படுத்தித் தந்துள்ளதாகவும் முஸ்லிம்களுக்கு எதிரான ஆட்சியில் இருந்து விடுபடவேண்டும் என்ற அழுத்தத்தை தான் நேற்றுவரை அங்கம் வகித்த அமைச்சர் அதாவுல்லாஹ் தலைமையிலான தேசிய காங்கரசுக்குள் பிரயோகித்து வந்ததாகவும் தனது கருத்துக்கள் தலைமையினால் நிராகரிக்கப்பட்டதால் தேசிய காங்கிரசை விட்டு வெளியேறி மைத்திரிபால சிறிசேன அவர்கள் தலைமையிலான பொது எதிரணியில் இணைந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.

புதிய ஜனநாயக முன்னணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அவர்களது தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதர்க்காக கல்முனை நகரமண்டப வீதியில், 2015-01-04 ல் தென்கிழக்கு தனியார் பஸ் ஊழியர் சங்கத்தினரின் ஏற்பாட்டில் கிழக்குமாகாணசபை உறுப்பினர் ஆரீப் சம்சுதீனினால் திறந்து வைக்கப்பட்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சமூகம் பதிக்கப் பட்டுக் கொண்டிருக்கும்போது வெறும் தலைமைத்துவ விசுவாசத்துக்காக சமூகத்தைக் அடகுவைக்க முடியாது என்றும் சிறுபான்மையினரின் பாதுகாப்பு அல்லாஹ்வை முந்தி இரண்டாவதாக மைத்திரிபால சிறிசேனவுடைய ஆட்சியிலேயே தங்கியுள்ளது என்றும் தற்போதுள்ள கொடுங்கோல் ஆட்சியில் இருந்து விடுபட எதிர்வரும் எட்டாம் திகதி அதிகாலையிலேயே வாக்குச்சாவடி களுக்குச் சென்று மைத்திரிபால சிறிசேனவுடைய சின்னமான அன்னம் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

No comments

Powered by Blogger.