பெண் பிள்ளை என்பதால், உயிரோடு புதைக்க முயன்ற தந்தை
(iNDIA)
பெண் பிள்ளை என்பதால் அதிருப்தியில் தனது 10 வயது மகளை வீட்டு கொல்லை புறத்தில் உயிரோடு புதைக்க முயன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது.
வாயில் பிளாஸ்டர் போட்டார் :
இந்தியா- வங்க தேச எல்லைப்பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் அபல் ஹூசேன். இவருக்கு 10 வயது பெண் குழந்தை உள்ளது. ஆண் குழந்தை பிறக்கவில்லையே என்ற கவலையில் இவர் அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் மனைவி வெளியே போய் இருந்த நேரத்தில் பெண் குழந்தையின் கை, கால்களை கட்டி, வாயில் பிளாஸ்டர் போட்டார். வீட்டு பின்புறத்தில் குழி தோண்டினார்.
தொடர்ந்து அந்த குழந்தையை குழியில் இறக்கினார். இவ்வாறு நடந்து கொண்டிருந்த போது மனைவி வந்து விட்டார். அரை குறையாக குழந்தை வெளியே தெரிந்ததால் மரக்கூடை ஒன்றை போட்டு குழந்தையை மறைத்தார். குழந்தையை காணவில்லை என சந்தேகமடைந்த மனைவி அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தபோது குழந்தை குழிக்குள் இறக்கப்பட்டது கண்டு பிடித்தார். உடனே தாய் கதறி அழுதாள். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர். வந்து அபல் ஹூசேனை பிடித்து அடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பெண் குழந்தை எனக்கு பிடிக்காத காரணத்தினால் இவ்வாறு குழந்தையை உயிரோடு புதைக்க முடிவு செய்தேன் என போலீசாரிடம் ஹூசேன் கூறியுள்ளார். போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Post a Comment