Header Ads



சந்திரிக்காவின் மகன், அரசியலுக்கு வருகிறார்..?

விரைவில் இடம்பெறவுள்ள நடாளுமன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் மகனான விமுக்தி குமாரதுங்க போட்டியிடவுள்ளார் என தெரிய வருகிறது. 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் கம்பஹா மாவட்டத்தில் அவர் போட்டியிடவுள்ளதாகவும் இது தொடர்பில் தனது மகனுடன் சந்திரிகா கலந்துரையாடியுள்ளார் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளன.

இதேவேளை, நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தற்போது நடைமுறையிலுள்ள விகிதாசார தேர்தல் முறையிலேயே நடத்தப்படவுள்ளதாக அரச உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பின்னரே தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வரப்படவுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழில் ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

No comments

Powered by Blogger.