Header Ads



பாராளுமன்ற தேர்தலில் முஸ்லிம் கட்சிகள், ஐக்கிய தேசிய கட்சியில் சங்கமம்..!

எதிர்வரும் மே மாதம் நடைபெறுமென எதிர்பார்க்கப்படும் பாராளுமன்ற தேர்தலில், முஸ்லிம் கட்சிகள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுமென ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு நம்பகரமான அரசியல் வட்டாரங்களிலிருந்து அறிய வருகிறது.

குறிப்பாக அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம் மற்றும் றிசாத் பதியுதீன் ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து போட்டியிடுவர்கள் என ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அறியக்கிடைத்தது.

பரஸ்பர ஒப்பதங்களை ரணில் விக்கிரமசிங்கவுடன் செய்து, இணக்கப்பாட்டின் அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக இவ்விரு கட்சிகளின் உயர்மட்டங்களில் இருந்து ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அறியக்கிடைத்தது.

குறிப்பாக அமைச்சர் றிசாத் பதியுதீனுடன் இணைந்து ஆசாத் சாலி மற்றும் பைஸர் முஸ்தபா ஆகியோர் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியுடன் மேலும் சில முஸ்லிம் அமைப்புக்கள் மற்றும் இயக்கங்களும் இணநை;து போட்டியிடலாமெனவும் அறியவருகிறது.

2 comments:

  1. SLMC must make this opportunity a golden opportunity to shape its future on a strict
    policy that SLMC will never again be an opportunist political party that represent
    Muslims.Whatever strategy they followed in the past,they were punished by the MARA gang for everybody to see.They took you in lashed out that you are opportunists.You took one direction and your followers another.Make sure this
    doesn't happen again.

    ReplyDelete
  2. UNP will not make the same mistake again.

    ReplyDelete

Powered by Blogger.