Header Ads



மஹிந்தவின் ஆட்சியில், பாதிக்கப்பட்டவர்கள் முறையிடலாம் (விபரம் இணைப்பு)

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆட்சியில் அநீதி இழைக்கப்பட்டவர்கள் மற்றும் பழிவாங்கல்களுக்கு உள்ளானவர்கள் குறித்த விபரங்களைத் திரட்டுவதற்கு ஜே.வி.வி மூவர் அடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளது.

முன்னாள் ஆட்சியில் ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தல் மற்றும் எதிர்காலத்தில் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதைத் தடுப்பதற்கான தேசிய வேலைத்திட்டங்கள் ஒருபுறம் முன்னெடுக்கப்பட்டிருக்கும் நிலையில், அநீதி இழைக்கப்பட்ட மற்றும் பழிவாங்கல்களுக்கு உட்பட்டவர்கள் பற்றிய விபரங்களை சேகரிக்க ஜே.வி.பி தீர்மானித்துள்ளது.

ஜே.வி.பி.யின் மத்திய குழுக் கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஜே.வி.பி.யின் மேல் மாகாணசபை உறுப்பினர் டொக்டர் நளின் டி.ஜயதிஸ்ஸ, மேல்மாகாண சபையின் உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணாராய்ச்சி, கொழும்பு மாநகரசபை உறுப்பினர் ஹேமந்த வீரக்கோன் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு

ஜே.வி.பியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த ஜே.வி.பியின் மேல்மாகாண சபை உறுப்பினர் டொக்டர் நளின்.டி.ஜயதிஸ்ஸ,

முன்னைய ஆட்சியில் இலஞ்ச மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு வேலைத்திட்டங்கள் பல ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனினும், இந்த ஆட்சியாளர்களால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் கவனம் செலுத்தவும், அவர்களின் தகவல்களைத் திரட்டி பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமொன்றைப் பெற்றுக்கொடுக்கவும் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரின் நெருக்கமான உறவினர்கள் மற்றும் அவருடைய தலைமையிலான அரசாங்கத்தில் அங்கம்வகித்த பிரதேசசபை உறுப்பினர் முதல் பாராளுமன்ற உறுப்பினர் வரையான சிலரால் மக்களுக்கு அநீதிகள் பல இழைக்கப்பட்டிருப்பதுடன், பழிவாங்கல்களும் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களின் தகவல்களைத் திரட்டி உரிய தரப்பின் ஊடாக நிவாரணங்களைப் பெற்றுக்கொடுக்க நாம் தீர்மானித்துள்ளோம்.

கடந்த ஆட்சியாளர்களால் சொத்துக்களை இழந்தவர்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகளை இழந்தவர்கள், பலவந்தமாகக் கடத்திச்செல்லப்பட்டு சொத்துக்கள் பறிக்கப்பட்டவர்கள், கேள்விப்பத்திரங்களுக்கு அப்பால் சென்று வழங்கப்பட்ட கட்டளைகளால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட சகல தரப்பினரும் இந்தக் குழுவிடம் தகவல்களை வழங்க முடியும்.

ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் போன்றவற்றின் பெருந்தொகை நிதி தேவையற்ற முதலீடுகளுக்குப் பயன்படுத்தப்பட்டன. இதனால் பாதிக்கப்பட்டவர்கள், பழிவாங்கப்பட்ட அரச சேவையாளர்கள், தாக்கப்பட்ட, அச்சுறுத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் என சகலரும் தமது விபரங்களை இந்தக் குழுவிடம் வழங்க முடியும்.

நாமல் ராஜபக்ஷவின் கடிதத்துடன் பல்கலைக்கழக அனுமதி, கொரிய வேலைவாய்ப்பில் நாமல் மற்றும் அதிகாரத்திலிருந்தவர்களால் வழங்கிய பட்டியலுக்கு முன்னரிமை அளிக்கப்பட்டமை போன்ற விடயங்களால் இளைஞர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறானவர்கள் தமது விபரங்களை வழங்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

43/20 நுககஹாபெதச, பிலியந்தலை வீதி, மஹரகம என்ற விலாசத்திற்கு அல்லது 0112896394, 0718106863 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு இவற்றை வழங்க முடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

1 comment:

  1. மகிந்த ராஜாவே! அளவாகத் துள்ளியிருக்க வேண்டாமா? அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.
    நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதாகவே சொன்னீர்களே. வினை விதைத்தவன் வினை அறுப்பான். தினை வினைத்தவன் தினை அறுப்பான் என்பதை மறந்துவிட்டீர்கள்.
    நாட்டு மக்களுக்காகச் செய்த சேவைகள் எல்லாம் எங்கே. வீட்டைக் கட்டி குரங்கை குடி வைத்தார் போல் ஆகிவிட்டீர்கள்.
    பின்னால் வர இருக்கும் எரிமலைபற்றி கற்பனை செய்யாமலே வாழ்ந்தீர்களே. பின்ன வரும் பிலாக்காயை விட முன்னால் வரும் களாக்காய் நலம்
    ஞான சேரரோடு கழுத்தில் கையைப் போட்டுக்கொண்டு வேகமாக ஓடினீர்களே. போவது சரியான பாதையாக இல்லாத போது வேகமாக ஓடுவதால் என்ன பயன்?
    இன்னும் இரண்டு வருட அராஜக ஆட்சியை விட முன்னால் தெரிந்தது 5 வருட ஆட்சி. ஆனால் ஆழமறியாமல் காலை இட்டிPhகளே.
    நீங்கள் உங்கள் பக்கத்தில் செல்லமாக வளர்த்தது பூனை. ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.
    உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.
    இப்போது உங்கள் ஆட்சியில் நடந்தவை யாவும் கடலாகக் கொந்தளிக்கிறதே. கடலுக்குக் கரை போடுவார் உண்டா?

    ReplyDelete

Powered by Blogger.