Header Ads



புத்தளத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் - வடக்கு முஸ்லிம்களும் உதவலாம்..!

-Muhusi Rahmathulla-

புத்தளம் மாவட்ட வாக்காளர்களாக பதிவு செய்துள்ள யாழ்.முல்லை,மன்னார் வாக்காளர்கள் நன்றி தெரிவிக்கும் தருணம்!

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்துக்கு நமது பிரதிநிதித்துவத்தை பெறுவதற்காக அல்லாஹ்வின் அருளால் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரயத்தனக்களுக்கு முழு அளவில் ஒத்துழைப்பும்,ஆதரவும் வழங்குவது புத்தளம் மாவட்ட வாக்காளர்களாக பதிவு செய்துள்ள யாழ்.முல்லை,மன்னார் வாக்காளர்கள் மீதுள்ள தார்மீகக் கடமையாகும்.

தமது சகலவித தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கும் அப்பால் இத்தேர்தலில் அவ்வாக்காளர்கள் செயற்பட வேண்டியுள்ளது. வேறு ஒரு வார்த்தையில் கூறுவதாயின் புத்தளம் மக்களுக்கு தமது நன்றிக் கடனை செலுத்தும் ஒரு அரிய சந்தர்ப்பமாக இதை அவர்கள் பயன்படுத்த வேண்டும். புத்தளத்துடன் இரண்டறக் கலந்து விட்ட அவ்வாக்காளர்களுக்கு குறுகிய பிரதேச வேறுபாடு ,உணர்வு என்பவற்றுக்கு அப்பால் நேர்மையான அணுகுமுறையில் சேவைகள் கிடைக்க வேண்டியுள்ளதையும் அவர்கள் நிச்சயம் புரிந்து கொள்வர் என திடமாக நம்பலாம்.

புத்தளம் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் தொடர்பில் இரு பிரதான கட்சிகளைத் தவிர்த்து முன்னெடுக்கப்படும் செயற்பாட்டின் பங்காளர்களாக அவர்கள் இருப்பர் என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை.

35000 வாக்குகளை இலகுவில் பெறலாம் இன்ஷா அல்லாஹ்.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் குறிப்பாக புத்தளம் தொகுதியில் உள்ள முஸ்லிம், தமிழ் வாக்குகாளர்கள் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை பெறுவதில் மிக அதிகப் பங்கினை வகிக்கப் போகின்றனர்.
இரு பிரதான கட்சிகளையும் தவிர்ப்பதில் இத்தேர்தலில் முஸ்லிம் தமிழ் வாக்களர்கள் சூழ்நிலைக் கைதிகாளாகவே இருக்கப் போகின்றனர். இத்தேர்தலில் அவர்கள் தமது பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்கு முன்னெடுக்கப்பட்டு வரும் பொறிமுறைக்கு முழுமையாகவும், உளப்பூர்வமாகவும் பங்களிப்பு செய்வர். அதற்கான காரணம் கடந்த 6 பொது தேர்தல்களிலும் தமது வாக்குகளுக்கு கிடைத்த பெறுமானத்தை பட்டவர்த்தனமாக அவர்கள் உணர்ந்திருப்பதே ஆகும்.

தீவிர கட்சி அரசியல் செயற்பாட்டாளர்கள் கூட தற்போதைய இதனை நன்கு புரிந்து கொண்டு சூழ்நிலைமைக்கேற்ப தம்மை சுதாகரித்துக் கொள்ளவும் ஆயத்தமாக உள்ளதை அவதானிக்க முடிகிறது.

இந்நிலையில் பின்வரும் இரு நடவடிக்கைகளில் முழுமையான கவனத்தையும் செலுத்த வேண்டும்.

1. பாராளுமன்றப் பிரதிநித்திதுவத்தை பெறுவதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் தற்போதைய வேலைத்திட்டம் மற்றும் முனைப்புக்கள் குக்கிராமங்கள் முதல் நகரம் வரை பேசு பொருளாக தற்போது இடம் பெற வேண்டும்.

2. அந்தந்த ஊர்களில் உள்ள புத்திஜீவிகள்,கற்றறிந்தவர்கள்,அரசியல் அனுபவசாலிகள், சமூக ஆர்வலர்கள்,மகளிர் அமைப்புக்கள்,சமய சமூக,கல்வி அமைப்புக்கள்,விளயாட்டு கழகங்கள் இளைஞர்கள்,யுவதிகள் இது தொடர்பில் தமக்கிடையே பரஸ்பரம் கருத்தாடல்களை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் தமது ஊர்களில் ஒவ்வொரு வீட்டுக்கும் இந்த செய்தியை இப்போது முதல் ஒவ்வொரு ஊரவர்களும் கொண்டு செல்ல வேண்டும்.

இந்தப் பணிகள் தொடராக இடம் பெறுவதன் ஊடாக இன்ஷா அல்லாஹ் இந்த வேலைத் திட்டத்துக்கு 35000 வாக்குகளை இலகுவில் எட்ட முடியும். அது மாத்திரமின்றி தொகுதியில் உள்ள சிங்கள வாக்காளர்களையும் இது தொடர்பில் விழிப்பூட்ட வேண்டியுள்ளது. இத்தகைய நிலைமையில் இதை விடவும் கூடுதல் வாக்குகளை கவர முடியும். இன்ஷா அல்லாஹ்.

No comments

Powered by Blogger.