Header Ads



யோஷித ராஜபக்ஸ குறித்து, விசாரணை நடத்துமாறு உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோசித ராஜபக்ஸ தொடர்பில் விசாரணை நடத்துமாறு பாதுகாப்புச் செயலாளர் பஸ்நாயக்க, கடற்படையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

யோசித கடற்படையில் இணைந்து கொண்ட விதம், பிரித்தானிய பாதுகாப்பு கல்லூரியில் புலமைப் பரிசில் கிடைத்த விதம் குறித்து விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

கடற்படைத் தளபதிக்கு, பாதுகாப்புச் செயலாளர் உடனடியாக இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளார்.

ஜே.வி.பி கட்சி செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

யோசித ராஜபக்ஸவிற்கு எதிராக ஜே.வி.பி முறைப்பாடு 

முன்னாள் ஜனாதிபதியின் மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோசித ராஜபக்ஸவிற்கு எதிராக ஜே.வி.பி கட்சி முறைப்பாடு செய்துள்ளது.

கடற்படையில் இணைந்து கொண்ட விதம் பதவி உயர்வு வழங்கப்பட்ட விதம், புலமைப் பரிசில் வழங்கப்பட்ட விதம் ஆகியன தொடர்பில் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்புச் செயலாளர் யூ.டி. பஸ்நாயக்கவிடம் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜே.வி.பி கட்சியின் மேல் மாகாணசபை உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸவினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

யோசித ராஜபக்ஸ இலங்கை இராணுவத்தின் லெப்டினாக கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உயர்தரத்தில் விஞ்ஞான பிரிவில் பயின்றவர்களே கடற்படையின் விசேடப் பிரிவில் சேவையில் இணைத்துக்கொள்ளப்படுகின்ற போதிலும் மரபுகளை மீறி யோசிதவிற்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஓராண்டு கால பயிற்சியின் பின்னரே புலமைப் பரிசில் வழங்கப்பட வேண்டிய நிலையில் யோசித மூன்று மாத கால பயிற்சியின் பின்னர் புலமைப் பரிசில் வழங்கி பிரிட்டனில் கல்வியைத் தொடர சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

யோசித ராஜபக்ஸ, அவரது சகோதரர் நாமல் ராஜபக்ஸவின் நீலப்படையணிக்கு சட்டவிரோதமான முறையில் உதவிகளை வழங்கியதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

படையதிகாரிகள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது முற்று முழுதாக தடை செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

யோசித ராஜபக்ஸ, தனியார் தொலைக்காட்சி ஒன்றின் உரியைமாளராக கடமையாற்றி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

யோசித ராஜபக்ஸ கடமைக்குத் திரும்பாவிட்டால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்புச் செயலாளரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது


1 comment:

  1. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறு என்றும், குறும்பியுள்ள காது தினவு கொள்ளும்

    ReplyDelete

Powered by Blogger.