Header Ads



அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை, முஸ்லிம் காங்கிரஸ் அழித்துவிட்டதாம்..!


-எம்.வை.அமீர்,எம்.ஐ.சம்சுதீன்-

அண்மையில் நாட்டில் இடம்பெற்ற ஆட்சிமாற்றத்தைத் தொடர்ந்து ஆட்சிமாற்றத்தின் உச்ச பங்காளிகளான ஐக்கிய தேசியக் கட்சியினர் நாட்டின் பல்வேறு பாகங்களிலும் புத்துணர்ச்சி பெற்று வருகின்றனர். கடந்த ஜனாதிபத்தித் தேர்தலின் போது நாட்டிலேயே அதி உச்ச வீதமான 89.81 வீத வாக்குகளை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களுக்கு வழங்கிய கல்முனை பிரதேசங்களிலும் ஐக்கிய தேசியகட்சியின் மீள் உத்வேகம் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன அதன் அடிப்படையில் 2015.01.26 ல், கல்முனையில் மிகவும் பழமைவாய்ந்த ஐக்கிய தேசியக் கட்சியின் அதாவது 09-09-1969ல் முதலாம் இலக்கத்தைக் கொண்டு ஆரம்பித்து செயற்பட்டு வந்த கல்முனைக்கிளை, அதன் தலைவர் ஏ.எம்.ஹுசைன் ஜே.பி.தலைமையில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்த்திருந்தது.
இந்த சந்திப்பின் போது இக்கிளையின் செயலாளர் ஏ.எம்.நூறுல்லாஹ்வும் மற்றும் ஏ.ஏ.அஸீஸ் உட்பட ஐக்கிய தேசியகட்சியின் கல்முனைக் கிளை முக்கிய உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

நிகழவில் ஐக்கிய தேசியகட்சியின் கல்முனைக் கிளையின் கடந்தகால செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத்தில் தாங்கள் எடுக்க இருக்கின்ற முன்னெடுப்புகள் மற்றும் கல்முனையில் எதிர்காலத்தில்,  ஐக்கிய தேசியக் கட்சியை உயிருட்ட எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில்  ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைகளுக்கு கல்முனை கிளையினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம் தொடர்பாகவும் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

அவர்களால் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் பின்வரும் விடயங்களை உள்ளடக்கியதாக இங்கு கருத்துத் தெரிவிக்கப்பட்டது.

01. அம்பாறை மாவட்டத்தில் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியை பலப்படுத்த வேண்டும். குறிப்பாக முஸ்லிம்கள் வாழும் பகுதியில்.

02. ஆரம்ப காலம் முதல் ஐக்கிய தேசியக் கட்சியை கட்டி எழுப்பி அதை காத்து வந்த மூத்த ஆதரவாளர்களையும் இளம் தலைமுறையினரையும் ஒன்றிணைக்க வேண்டும்.

03. தேர்தல் காலம் வந்துவிட்டால் நாடகம் ஆடிக் கொண்டு வரும் அரசியல் வியாபாரிகளை எமது கட்சிக்கு இனிமேல் உள்வாங்கக் கூடாது. அவர்களால்தான் எமது கட்சிக்கு கேட்ட பெயர்.

04. தேர்தல் காலங்களில் ஏனைய சிறிய, மதவாத, இனவாத, பிரதேசவாத கட்சிகளை இணைத்து போட்டியிடுவதை தவிர்த்து தனித்துவமாக போட்டியிட நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக அம்பாறையில்.

05. கடந்த காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டையாக இருந்த அம்பாறை மாவட்டத்தை இன்று பறி கொடுத்துவிட்டு இருக்கிறோம். இந்நிலை மாற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

06. அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை அழித்தது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தான். அவர்கள் அப்படி அழிக்க எமது கட்சிதான் இடமளித்தது. இனிமேலும் அவர்களின் சதிவலையிலிருந்து எமது கட்சியை பாதுகாக்க வேண்டும்.

07. எமது கட்சியையும் எமது பிரதிநிதித்துவத்தையும் இனிமேல் தனித்துவமாய் பாதுகாக்க வேண்டும் என்றால் எந்தக் காரணம் கொண்டும் எமது கட்சியுடன் இணைத்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை அம்பாறையில் தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கக் கூடாது.

08. அம்பாறை மாவட்டத்தில் அதிலும் குறிப்பாக கல்முனை பிரதேசத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்திலும், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகள் மூலம் செய்த அபிவிருத்தி சேவைகளுடன் ஒப்பிடும் போது தற்போதுள்ளவர்கள் எதுவும் பெரிதாக செய்யவில்லை. மாறாக தடங்களை அதித்ததுதான் அதிகம். அதை மாற்ற வேண்டும்.

09. கல்முனை மாநகரை எமது கட்சியின் தேசியத் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கூறியது போல் அழகிய நகராக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தலைவரின் நேரடி கண்காணிப்பில்

10. கடந்த காலங்களில் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினரால் எமது பகுதியில் பாதிக்கப்பட்ட, மற்றும் பழிவாங்கப்பட்ட எமது கட்சியின் ஆதரவாளர்களுக்கு நிவாரணம் அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

11. அன்றிலிருந்து இன்றுவரை எமது கட்சியின் ஆதரவாளர்களை தொடர்ச்சியாக அரசியல் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து கொண்டு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் வாதிகள் பழிவாங்கிய வண்ணமே உள்ளனர். இந்நிலையை மாற்ற வேண்டும். அதற்கு பழையபடி எமது கட்சியில் உள்ளவர்கள் எமது அரசியில் அதிகாரத்தை பெற்று எமக்கு விடிவைப் பெற கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும.

12. எமது பகுதியில் உள்ள ஏழை, எளியவர்கள், வீடுகள் இல்லாமல் கஷ்டப்படுபவர்கள், வசதியின்மையால் கல்வி கற்க கஷ்டப்படும் எதிர்கால சந்ததியினருக்கும் வழிகாட்ட வேண்டும்.

13. எமது பகுதயில் உள்ள பல்கலைக்கழகம் சென்று உயர் கல்வி கற்க சிரமப்படும் ஏழை   மாணவர்களுக்கு உயர் கல்வி கற்க வசதி ஏற்படுத்த வேண்டும்.

14. எமது பகுதயில் உள்ள பாடசாலைகளின் அடிப்படைத் தேவைகள், பௌதீக வளங்கள், ஆசிரிய பற்றாக்குறை போன்றவற்றை நிவர்த்தி செய்து சிறந்த கல்வியைப் பெற வாய்ப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

15. வேலையில்லா பட்டதாரிகளுக்கும், வேவைலயற்ற இளைஞர் யுவதிகளுக்கும் வழிகாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

16. கல்முனை பிரதேச செயலகத்தில் கடந்த இரண்டரை வருடங்களாக உரிய இடம் வழங்கப்படாமல் பயிற்சியாளராக இருந்து கொண்டு பல கஷ்டங்களை அனுபவித்து வரும் பட்தாரிகளுக்கு உரிய இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(இலங்கையிலேயே  ஆகக்கூடிய பயிற்றப்பட்ட பட்டதாரிகள் கல்முனை பிரதேச செயலகத்தில் மட்டுமே உள்ளனர்.)

என்பன போன்ற கருத்துக்களை உள்ளடக்கி கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அதற்க்கு மேலாக கல்முனையின் அபிவிருத்தி விடயம் மற்றும் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் கல்முனைக்கு ஏ.ஏ.அஸீஸ் அவர்களை அமைப்பாளராக நியமிக்கக் கோருவது சம்மந்தமாகவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

3 comments:

  1. உன்மையான சுய நலக்கூட்டம் இவர்கள்தான் என்பது தெளிவாக புரியுது

    ReplyDelete
  2. Ihellam Oru Seithi Jaffna Muslim.com kku vera welai illaoyah chik ..................

    ReplyDelete

Powered by Blogger.