Header Ads



''உப்பை தின்றவன், தண்ணி குடிக்க வேண்டும்''


இலங்கையின் முன்னாள் மன்னர் மஹிந்த ராஜபக்க்ஷவும் (மரா) சுகாதார அமைச்சரான டாக்டர் ராஜித சேனரத்னவும் இன்றைய (26) சந்திப்பு ஒன்றில் இவ்வாறு காணப்பட்டனர்.

ஹுணுப்பிட்டிய கங்காரமய விஹாரையில் இன்று (26) இந்தப் படம் பிடிக்கப்பட்டது. பாதுகாப்பும் இல்லை. பரிவாரங்களும் இல்லை.. பக்கத்தில் சூழ்ந்து நின்ற பக்தாத் திருடர்களும் இல்லை.. பார்க்க பாவம்தான் என்ன செய்வது, உப்பை தின்றவன் தண்ணி குடிக்க வேண்டுமென்ற யதார்த்தத்தையும் மீற முடியாது அல்லவா..?

- ஏ.எச்.சித்தீக் காரியப்பர்


2 comments:

  1. மகிந்த ராஜாவே! அளவாகத் துள்ளியிருக்க வேண்டாமா? அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.
    நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதாகவே சொன்னீர்களே. வினை விதைத்தவன் வினை அறுப்பான். தினை வினைத்தவன் தினை அறுப்பான் என்பதை மறந்துவிட்டீர்கள்.
    நாட்டு மக்களுக்காகச் செய்த சேவைகள் எல்லாம் எங்கே. வீட்டைக் கட்டி குரங்கை குடி வைத்தார் போல் ஆகிவிட்டீர்கள்.
    பின்னால் வர இருக்கும் எரிமலைபற்றி கற்பனை செய்யாமலே வாழ்ந்தீர்களே. பின்ன வரும் பிலாக்காயை விட முன்னால் வரும் களாக்காய் நலம்
    ஞான சேரரோடு கழுத்தில் கையைப் போட்டுக்கொண்டு வேகமாக ஓடினீர்களே. போவது சரியான பாதையாக இல்லாத போது வேகமாக ஓடுவதால் என்ன பயன்?
    இன்னும் இரண்டு வருட அராஜக ஆட்சியை விட முன்னால் தெரிந்தது 5 வருட ஆட்சி. ஆனால் ஆழமறியாமல் காலை இட்டிPhகளே.
    நீங்கள் உங்கள் பக்கத்தில் செல்லமாக வளர்த்தது பூனை. ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.
    உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.
    இப்போது உங்கள் ஆட்சியில் நடந்தவை யாவும் கடலாகக் கொந்தளிக்கிறதே. கடலுக்குக் கரை போடுவார் உண்டா?

    ReplyDelete

Powered by Blogger.