விமல் வீரவன்சவின் விசுவாசியான எம்.பி. மைத்திரிக்கு ஆதரவு
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார். ஜாகொட தேசிய சுதந்திர முன்னணியின் முக்கிய உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று 2-1-2015 காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.
மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கும் மூன்றாவது தேசியப் பட்டியல் ஆளும் கட்சி உறுப்பினர் அச்சல ஜாகொட என்பது குறிப்பிடத்தக்கது.
அச்சல ஜாகொட எதிரணியில் இணைந்தன் மூலம் ஆளும் கட்சியின் மூன்று தேசியபட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிரணில் இதுவரை இணைந்துக்கொண்டுள்ளனர்.
ஜே.வி.பியில் அங்கம் வகித்த ஜாகொட பின்னர் விமல் வீரவன்ஸவின் தேசிய சுதந்திர முன்னணியில் இணைந்தார். இதன் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியபட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட ஜாகொட ஜனாதிபதியினால் சுற்றுலாத்துறை பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டார்.

Post a Comment