Header Ads



மூழ்காது என்ற டைட்டானிக் கப்பலைப் போல், மகிந்த அரசு மூழ்கிக் கொண்டிருக்கிறது - ரணில்

மூழ்காது என்ற டைட்டானிக் கப்பலைப் போல் மகிந்த அரசு மூழ்கிக் கொண்டு இருக்கின்றது. இவ்வாறு ஐ.தே.க தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்
டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்காது என்று கூறப்பட்ட போதிலும், அதன் கன்னிப் பயணத்திலேயே மூழ்கியது போல, மகிந்த அரசை அசைக்க முடியாது என்று ஆணவத்துடன் இருந்த ஆட்சியாளர்கள் இப்பொழுது டைட்டானிக் கப்பலைப் போல் மூழ்கிக் கொண்டு இருக்கின்றார்கள்.

இவ்வாறு நேற்று நீர்கொழும்பில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் ஐ.தே.க தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது மேல் மாகாண சபை உறுப்பினருக்கு பயந்து அரசு அவரை சிறையில் தள்ளியது. அதற்கான தண்டனையை வரும் 8ம் திகதி நீர்கொழும்பு மக்கள் அரசுக்கு வழங்க தயாராகி விட்டார்கள்.

எமது ஆட்சியின் கீழ் வெளிநாட்டு படகுகளின் மீன்பிடிக்கு தடை செய்வதோடு, நீர்கொழும்பில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும்.

அத்துடன் வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்திருப்பவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்.

மைத்திரிக்கு வாக்களிப்பதே ஏழை மக்களின் வளமான வாழ்வுக்கான வழி என்றும் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.