அக்கரைப்பற்றிலும், சாய்ந்தமருதிலும் அரங்கேறிய காடைத்தனங்கள் - ஒரு ஊடகவியலாளனின் நேரடி சாட்சி
-Mabrook UL-
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினர் - கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடத்திய இரண்டு நிகழ்வுகளில் காடைத்தனங்கள் அரங்கேறியிருந்தன.
அக்கரைப்பற்றிலும், சாய்ந்தமருதிலும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வுகளிலேயே, இந்த காடைத்தனங்கள் இடம்பெற்றன.
சாய்ந்தமருதுவில் - இந்தக் காடைத்தனங்கள் அரங்கேறியபோது - நானும் ஓர் ஊடகவியலாளராக அங்கிருந்தேன்.
சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் நடைபெற்ற அந்த நிகழ்வில், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினர் உரையாற்றினார்கள். அவர்களின் உரைகள் மிகவும் நாகரீகமாக அமைந்திருந்தன. முஸ்லிம் அரசியலையும், அரசியல்வாதிகளையும் அவர்கள் விமர்சித்தார்கள். ஆனால், எவருடைய பெயரையும் அவர்கள் குறிப்பிடவில்லை.
கூட்டத்தைக் காண வந்தவர்கள் என்கிற தோரணையில், அங்கு வந்திருந்த ஒரு கும்பல் - வேண்டுமென்றே பிரச்சினையை ஆரம்பித்தார்கள். கதிரைகளைத் தூக்கி, அடுத்தவர் மீது வீசினார்கள். வெளியில் சென்று கல்லெடுத்து, மண்டபத்தின் மீது வீசினார்கள். இவற்றில் அதிகமானவற்றினை எனது கமராவில் பதிவு செய்து கொண்டேன். அப்போது, படம் எடுத்துக் கொண்டிருந்த என்னைப் பார்த்தும் - காடையர்களில் ஒருவர் அச்சுறுத்தும் தொனியில் பேசினார்.
அக்கரைப்பற்றிலும், சாய்ந்தமருதுவிலும் - நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினரின் நிகழ்வுகளில் குழப்பத்தை ஏற்படுத்தியவர்கள் மு.காங்கிரசின் ஆதரவாளர்கள்தான் என்கிற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. குறித்த காடையர்களின் பின்னால், உள்ளுர் 'ராசா'க்கள் இருந்திருக்கிறார்கள்.
கருத்தை கருத்தால் எதிர்கொள்வதை விட்டுவிட்டு, கருத்தை காடைத்தனத்தினால் எதிர்கொள்ளும் - இந்த நடவடிக்கைகள் மிகவும் கண்டிக்கத்தக்கவை.
அப்படியென்றால், அதாஉல்லா அமைச்சராக இருந்தபோது, அக்கரைப்பற்றுக்குள் முஸ்லிம் காங்கிரசின் கூட்டங்களை நடத்த விடாமல் - அராஜகம் செய்தமையை, முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள் இனி - எப்படி விமர்சிக்க முடியும்.
சாய்ந்தமருதுவில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினரின் கூட்டத்தைக் குழப்பியவர்களில் ஒருவர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களைப் பார்த்து இப்படிக் கூறினார்; "நீங்கள் அரசியல் செய்வதென்றால், காத்தான்குடியில் செய்யுங்கள். சாய்ந்தமருதுவுக்கு வரக் கூடாது. இங்கு வந்தால், உங்களுக்கு இதுதான் கதி"
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் அப்துல் ரஹ்மான் காத்தான்குடியைச் சேர்ந்தவர். அதனால்தான், அந்தக் குழப்பக்காரர் அவ்வாறு கூறினார்.
இது மிக மிகக் கேவலமானதொரு மன உணர்வாகும். குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்டிக் கொண்டிருப்பவர்களிடம், இந்த வார்த்தைகளை விட, வேறெதனை நாம் எதிர் பார்க்க முடியும்.
அப்படியென்றால், ரஊப் ஹக்கீம் - கண்டியோடு, தனது அரசியலை மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டுமென, மற்றைய கட்சிக்காரன் சத்தமிடத் துவங்கும் போது, இந்தச் சண்டியர்கள் என்ன செய்வார்கள்?!
கருத்தை கருத்தால் எதிர்கொள்ளும் ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதுதான் - நல்லதொரு அரசியல் செயற்பாட்டுக்குரிய ஆரம்பமாகும்!

பிரதேச வாதத்தில் ஊறிப்போன சமுகம்
ReplyDeleteAllah podumanavan
ReplyDeleteமு. கா. காரர்கள் உலகை உய்வித்துக் கொண்டிருக்கும் ரட்சகர்களா என்ன? அல்லது அவர்கள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்களா..?
ReplyDeleteஉண்மையில் அவர்கள் நமது சமூகத்திற்கு பல தவறுகளைச் செய்தவர்கள்!
கடந்த ஆட்சிகாலத்தில் நமது முஸ்லீம்சமூகத்திற்கு வரலாற்றில் இல்லாதளவு ஆபத்துவந்தபோதெல்லாம் வாயைக்கூடச் சரியாகத் திறக்காமல் வாளாவிருந்தவர்கள்தான் அவர்கள்.
அத்தகையோரை விமர்சிப்பது குற்றமா?
தவறுகளை மீண்டும் மீண்டும் செய்துகொண்டு தேர்தல் சமயத்தில் மட்டும் 'நாரே தக்பீர் அல்லாஹு அக்பர்' கோஷங்களுடன் மக்களின் வாக்குகளை வாங்கிச் சென்று விற்றுப்பிழைத்து பதவிகளில் சவாரிசெய்வதுதான் சமூகத்திற்குச் அவர்கள் செய்யும் கைமாறா..?
தட்டிக்கேட்பவன் தவறுகளை தொடர்ந்தும் செய்து கொண்டிருப்பவனை விட மட்டமா என்ன? இதுதான் குர்ஆன் ஹதிஸைக் காண்பித்து கட்சி நடாத்தும் உங்களுக்கு இஸ்லாம் காண்பித்த வழியா என்ன?
ஆட்சிமாற்றத்திற்கு ஆதரவாக மக்களாக முடிவெடுத்து, அதிலே பெரும்பங்களித்துவிட காத்திருந்தபோது வேறுவழியின்றி கடைசி நேரத்தில் 'துண்டைப்பிடி துணியைப்பிடி' யென்று ஓடும் ரயிலில் ஒட்டிக்கொண்டவர்கள்தான் மு. கா. வகையறாக்கள். இதைமறந்துவிட்டு இன்று நீதியை நியாயத்தைப் பேசுபவனை அடிக்க வருகின்றீர்கள்.
இந்த அநியாயத்தை ஆதரித்தால், பொதுபலசேன போன்றவர்களுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம் என்ன? காவியும் வெள்ளையுமா?
ஒன்றுமட்டும் தெரிந்து வைத்திருங்கள் மு. கா சண்டித்தன நண்பர்களே!
ஆனானப்பட்ட ராஜபக்சவையே தூக்கியெறிந்த மக்களுக்கு மு.கா. ஒன்றும் பொருட்டேயல்ல.
காலம் பதில் கூறும்.