Header Ads



ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்துவிட்டால், அவர் தோற்கப்போகிறார் என்றுதான் அர்த்தம் - றஊப் ஹக்கீம்

(பி.எம்.எம்.ஏ.காதர்)

ஜனாதிபதி 8ம் திகதி நள்ளிரவோடு பாராளுமன்றத்தைக் கலைத்து விடுவாராக இருந்தால் அவர் தோற்கப்போகின்றார் என்பதுதான் அதனுடைய தார்ப்பரியம்மாகும் என  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும், முன்னாள் நீதி அமைச்சருமான  பாராளுமன்ற உறுப்பினர் றஊப் ஹக்கீம் தெரிவித்தார். 

பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவை ஆதரித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மருதமுனை மத்திய குழு ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று (03-01-2015)  நல்லிரவுவரை மருதமுனை கடற்கரை வீதியில் நடைபெற்றது. இங்கு உரையாற்றிய போதே றஊப் ஹக்கீம் இதனைத் தெரிவித்தார். இங்கு றஊப் ஹக்கீம் மேலும் உரையாற்றுகையில்,

ஒரு கட்சியில் இணைகின்ற பிரிகின்ற சந்தர்ப்பங்களில் இணைகின்ற போது  எல்லோரும் ஒட்டு மொத்தமாக இணைந்து விடுகின்றோம் ஆனால் பிரிந்து வருகின்ற போது துண்டு துண்டாக பிரிந்து வரவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டு விடுகின்றோம்.

ஆனால் இம்முறை எந்தச் சேதாரமும் இல்லாமல் ஒட்டு மொத்தமாக அனைவரையும் சேர்த்துக் கொண்டு வந்திருக்கின்றோம் என்பது கட்சி ஆதரவாளர்களுக்கு ஆறுதலைடைகின்ற விடயமாக இருக்கின்றது. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு புதிய பாராளுமன்ற சமன்பாட்டை வடிவமைப்பதாகும்.

அதற்கு இடம் கொடுக்காமல் 8ம் திகதி நல்லிரவோடு ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்து விடுகின்ற கதை அடிபடுகின்றது. ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன ஆர்.பிரேமதாசாவை வேட்பாளராக நியமித்துவிட்டு 1988ம் ஆண்டு  டிசம்பர் மாதம் நல்லிரவோடு பாராளுமன்றத்தைக் கலைத்தாரோ அதே போன்று தன்னை வேட்பாளராக நியமித்துக் கொண்டுள்ள இந்த ஜனாதிபதி தனக்கு இந்தப் பாராளுமன்றத்திலே பெரும்பான்மை தேவையில்லை என்ற முடிவுக்கு வருவாராக இருந்தால் அதனுடைய தார்ப்பரியம் வேறெதுவுமில்லை தான் தோற்கப்போகிறேன் என்று தெரிந்து தான் அதைச் செய்கிறார்.என ஹக்கீம் மேலும் தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.