மைத்திரி, ரணில் ஆகியோருடன் அநுரகுமார திசாநாயக்கா முக்கிய சந்திப்பு
ஜே.வி.பியினால் பரிந்துரைக்கப்பட்ட நிறைவேற்றுச் சபை தொடர்பான கலந்துரையாடல் இன்று 15-01-2015 ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பில், ஜே.வி.பியின் சார்பில் அதன் தலைவர் அனுரகுமார திசாநாயக்க கலந்துகொண்டார்.
ஜனாதிபதி, பிரதமர்; மற்றும் பொது எதிர்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றதாக ஜே.வி.பியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் அனைத்து கட்சிகள் மற்றும் பொது இயக்கங்களின் பங்களிப்புடன் தேசிய ஆலோசனை சபை என்ற அமைப்பொன்றை ஸ்தாபிப்பதறகும் பிரேரிக்கப்பட்டுள்ளது.
.jpg)
ஆக்கபுஊர்வமான ஆலோசனை.
ReplyDelete