Header Ads



அரசாங்கத்துடன் இணைந்தமைக்காக கவலையடைகின்றேன் - திஸ்ஸ அத்தநாயக்க

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டமைக்காக வருந்துவதாக முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்துடன் இணைந்து கொண்டமைக்காக கவலையடைகின்றேன். ஏதோவொரு கெட்ட கிரக நிலைமை காரணமாக இவ்வாறு நேர்ந்திருக்கும்.

தொடர்ந்தும் நான் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக கடமையாற்றுவேன். அரசியலை விட்டு விலகிப்போக எவ்வித உத்தேசமும் கிடையாது.

எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தீர்மானங்கள் குறித்து விரைவில் அறிவிப்பேன் என தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்று அரசியல் எதிர்காலம் குறித்து திஸ்ஸ அத்தநாயக்கவிடம் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

திஸ்ஸ அத்தநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக செயற்பட்டதுடன், கட்சியின் பொதுச் செயலாளராக பல ஆண்டுகள் கடமையாற்றியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலின் இறுதி வாரங்களில் ஆளும் கட்சியில் இணைந்து கொண்ட திஸ்ஸ அத்தநாயக்க, தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வகித்து வந்த சுகாதார அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

இந்தப் பதவியில் சுமார் 20 நாட்கள் கூட கடமையாற்ற திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

6 comments:

  1. நீ சுயநலத்திற்காக கட்சி மாறி இருந்தாள் அது மணித இயள்பு தப்பு கிடயாது ஆனால் நீயோ சதிகாரர்களுடன் சேர்ந்து உன் தலைவனையும் தற்போதயஜெனாதபதியையும் சதிகாரர்கள் என முத்திரை குத்த முயச்சுத்தமையானது இனியும் நீ அரசியலில் நீடிக்க தகதியற்றவன் என்ற உண்மையை மக்கள் மயப்படுத்தி விட்டாய்.

    ReplyDelete
  2. ஆட தெரியாதவனுக்கு மேடை கோணலாம்.
    எப்படி இருக்கு முதுநிலை அரசியல்வாதிகளின் கருத்துக்கள்

    ReplyDelete
  3. One can understand how much destruction he would have caused to the UNP while
    being the secretary of the party.Allowing Mahinda to hijack him to match the departure of My3 to boost Mahinda's image was the most despicable ugly act of this man.At a very crucial time he was shamelessly treacherous to his party holding a higher position of trust.He should never be pardoned by UNP.

    ReplyDelete
  4. சட்டி சுட்டதடா...!!!
    கை விட்டதடா.....!

    ReplyDelete
  5. 'நாட்டில் நல்லாட்சி நிலவவே வேண்டியதில்லை' என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ நினைத்தால் திரு. திஸ்ஸ அத்தநாயக்கவின் இழிவான துரோகத்தை மன்னித்து ஏற்றுக்கொள்ளலாம்.

    ReplyDelete

Powered by Blogger.