Header Ads



மைத்திரியின் வெற்றியை உறுதிப்படுத்த, தீக்குளிப்பா..?

விஹார மஹாதேவி பூங்காவிற்கு அருகாமையில் நபர் ஒருவர் தீக்குளித்துள்ளார்.

72 வயதான நபர் ஒருவரே இவ்வாறு தனக்குத் தானே தீ மூட்டி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை 5.00 மணியளவில் உடலுக்கு மண்ணெண்ணை ஊற்றி இவ்வாறு தீ மூட்டிக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொட்டாவை பன்னிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளா மைத்திரிபாலவின் வெற்றியை உறுதி செய்யும் நோக்கில் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சில ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.