Header Ads



500 மில்லியனும், சஜித் பிமேதாஸாவின் நெத்தியடியும்..!

நான் அமைச்சுப் பதவிக்காக 500 மில்லியன் ரூபாவைக் பெற்றுக்கொண்டு அரசாங்கத்துக்குச் செல்வேன் எனக் கூறிய கட்டுக்கதைகளை மக்கள் நம்பவேண்டாம். ஐக்கிய தேசியக் கட்சி என்பது எனது உயிர் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்தலைவர் சஜித் பிரேமதாச அம்பாந்தோட்டை முல்கிரிகல தேர்தல் தொகுதியில் நடந்த கூட்டத்தில் நேற்று தெரிவித்தார். 

இங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது; 

இந்த அரசாங்கத்தின் ஆட்சி முடிய இன்னும் இரண்டு நாட்களே உள்ளன .இந்தச் சந்தர்ப்பத்தில் ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் பயத்தில் ஏதேதோ பேசுகின்றனர். இப்படித்தான் அமைச்சுப் பதவிக்காக 500 மில்லியன் ரூபாவைப் பெற்றுக்கொண்டு அரசாங்கத்துக்குச் செல்வேன் என என்னைத் தொடர்புபடுத்தி கட்டுக்கதைகளைக் கட்டியுள்ளனர். 

இதனை மக்கள் நம்பவேண்டாம். ஜனவரி ஒன்பதாம் திகதி பொதுவேட்பாளர் மைத்திரி ஆதரவுடன் புதிய ஆட்சி ஒன்றை அமைப்போம். மக்கள்மீது சுமத்தப்பட்டுள்ள வரிச்சுமைகளை இல்லாமல் செய்து மக்கள் ஆட்சி ஒன்றை ஏற்படுத்துவோம். ஜனவரி எட்டாம் திகதி உங்களது வாக்குச்சீட்டு, அடையாள அட்டை என்பனவற்றை பத்திரமாகக் கொண்டுசென்று  மைத்திரிக்கு வாக்களியுங்கள். எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் பயப்படவேண்டாம். எந்த அச்சுறுத்தலும் ஜனவரி எட்டாம் திகதிவரையே. 

No comments

Powered by Blogger.