பலஸ்தீன் பூமியில், கடந்தவருடம் மாத்திரம் 15.000 யூதர்கள் சட்டவிரோதமாக குடியேறியுள்ளனர்
2014-ஆம் ஆண்டு ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் யூதர்கள் மட்டுமாக பிரத்யேகமாக கட்டப்பட்ட வீடுகளில் 15 ஆயிரம்பேர் குடியேறியிருப்பதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
உள்துறை அமைச்சகத்தின் புள்ளிவிபரப்படி ஜூதியசமாரியாவில்(மேற்கு கரை) 4 லட்சம்பேர் குடியேறியுள்ளனர்.ஆகையால் தான், இஸ்ரேலை பொறுத்தவரை ஜூதியசமாரியா தவிர்க்க முடியாதது என்று முன்னாள் யெஷா கவுன்சில் தலைவர் டானி தயான் தெரிவித்துள்ளார்.
மேற்கு கரையில் யூத குடியிருப்புகளுக்கான நகராட்சி குழுக்களின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் அமைப்புதான் யெஷோ கவுன்சில்.2013-ஆம் ஆண்டிற்கு பிறகு மேற்கு கரையில் குடியேறிய யூதர்களின் எண்ணிக்கை 15 ஆயிரம் என்று தயான் தெரிவித்துள்ளார்.
மற்ற இடங்களில் வாழ்க்கைச் செலவு அதிகமாக இருப்பதாலும், இஸ்ரேல் அரசின் கொள்கைகள் காரணமாகவும் இஸ்ரேல் நகரங்களை விட மேற்கு கரையில் வசிக்க பெரும்பாலான யூத குடியேற்றக்காரர்கள் விரும்புகின்றனராம்.
தயான் அளித்துள்ள புள்ளிவிபரங்களில் கிழக்கு மேற்கு கரையில் வசிக்கும் யூதர்களை உட்படுத்தவில்லை.ஏறத்தாழ இரண்டு லட்சம் யூதக் குடியேற்றக்காரர்கள் கிழக்கு மேற்கு கரையில் வசிக்கின்றனர்.

யா அல்லாஹ்! இந்த அநியாயக்கார யூதர்களை முஸ்லிம்களின் புன்னிய பூமியை விட்டும் விரட்டியடித்து பைதுல் மக்திஸையும் அதனைச் சூழவுள்ள பகுதிகளையும் முஸ்லிம்களுக்கே மீட்டித் தருவாயாக. இவர்களின் சூழ்ச்சிகளை விட்டும் முஸ்லிம்களைப் பாதுகாப்பாயாக.
ReplyDelete