Header Ads



விமானத்தின் உள்ளே இருந்து வெளியேறிய புகை..!


இங்கிலாந்தி சவுத்தாம்ட்டன் பகுதியில் இருந்து 69 பயணிகளுடன் புறப்பட்ட பிலைப் விமானத்தின் லக்கேஜ் வைக்கப்படும் இடத்தில் இருந்து புகை வெளியேறியதாக தகவல் கிடைத்ததால், அந்த விமானம் அவசரமாக பெல்பாஸ்ட் சிட்டி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

பெல்பாஸ்ட் சிட்டி விமான நிலையத்தை நோக்கி வந்துக்கொண்டிருந்த இந்த விமானத்தின் 'லக்கேஜ் ஹோல்ட்' பகுதியில் இருந்து புகை வெளியேறியதை அறிந்த விமான குழுவினர், விமானத்தை அவசரமாக தரையிறக்க அனுமதி கேட்டனர்.

இதையடுத்து, பெல்பாஸ்ட் சிட்டி விமான நிலைய அதிகாரிகள் முன்னெச்சரிக்கையாக ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களை தயார் நிலையில் வைத்தனர். அதன்பின், பி,996 எனும் அந்த விமானம் 69 பயணிகள் மற்றும் 4 விமான குழுவினரோடு நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு 10 நிமிடங்கள் முன்பாகவே பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக தெரிவித்துள்ள பிலைப் விமான நிறுவனம், 'பெல்பாஸ்ட் சிட்டி விமான நிலையத்தை நோக்கி 69 பயணிகள் மற்றும் 4 விமான குழுவினரோடு வந்துக்கொண்டிருந்த பிலைப் விமானத்தின் 'லக்கேஜ் ஹோல்ட்' பகுதியில் புகை வெளியேறியதாகக் கூறிய விமானிகள், அந்த விமானத்தை அவசரமாக தரையிறக்க வேண்டுமென தெரிவித்தனர்.

அதன்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. விமானம் தரையிறங்கியதும் பயணிகள் அனைவரும் எந்த பாதிப்புமின்றி பத்திரமாக வெளியேற்றபட்டனர். தரையிறக்கப்பட்ட விமானத்தில் இருந்து புகை வெளியேறவில்லை. எனினும், இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது' எனக் கூறியுள்ளது.

பெல்பாஸ்ட் சிட்டி விமான நிலையத்தில் இந்த மாதம் அவசரமாக தரையிறக்கப்படும் இரண்டாவது பிலைப் விமானம் இதுவாகும். இதற்கு முன் கிளாஸ்கோவிலிருந்து வந்த விமானம் எஞ்சினின் தீப்பிடித்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.