றிசாத் பதியுதீன் ஹீரோவா..? சீரோவா..??
(தினகரன் வாரமஞ்சரி)
பொதுபல சேனாவின் முஸ்லிம் விரோதப் போக்கினை மஹிந்த அரசு கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாம். அதனால்தான் தான் அரசிலிருந்து வெளியேறுகிறாராம். நல்லவேளை தேர்தல் வந்ததால் அமைச்சர் றிசாத் இப்போதாவது இதனைக் கண்டுபிடித்தார். இல்லாவிட்டால் ஜனாதிபதியின் பதவிக் காலம் இன்னமும் இரண்டு வருடங்களில் முடிந்து அப்போது தேர்தல் வரும்போதுதான் கண்டு பிடித்திருப்பார். என்னடா உலகம் இது? இதனை நம்புபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். இதனையே இவர் தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக கூறி அதிரடியாக வெளியேறியிருந்தால் இவர் ஹீரோ. ஆனால் இப்போது அவர் அஸ்வர் அவர்கள் கூறியதுபோல சீரோவாகியுள்ளாராம். என்னதான் இருந்தாலும் மைத்திரி ஆட்சி அமைப்பார் அதில் அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற இவரைப் போன்றவர்களது கனவு ஒருபோதும் பலிக்கப்போவதில்லை. இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதை கட்சி தாவுவோர் விரைவில் உணர்வர். எப்படியும் இவர்கள் எல்லோருமே இக்கரைக்கு மீண்டும் வந்தே ஆக வேண்டும். அப்போது எங்கே போய் முகத்தை வைக்கப் போகிறார்களோ தெரியவில்லை. அரசியலில் இதுவெல்லாம் சகஜம்தானே என்று கூறிக்கொள்வார்களோ?

Mr.Rizad Badudeen took a right decision on a right time.. leave the useless peoples comments.. even if he resign his ministry on that time, nothing will be affected to government
ReplyDeleteஅரசாங்கம் வழங்கிய சகலவிதமான சலுகைகளையும், வளங்களையும் ஒன்றுவிடாது நேற்றுவரை அனுபவித்துவிட்டு, இன்று எதிரணிக்குச் சென்ற மன்னார் முனாபிக் ஒருவர் அப்பாவியான அஸ்வருக்கும் நயவஞ்சக துரோகம் இழைத்துள்ளார் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். why this is not published here
ReplyDeleteஇந்த விமர்சனத்தைச் செய்தவருக்கு முஸ்லிம்சமூகம் பற்றிய தூரநோக்கு சிந்தனை கிடையாது என்று நினைக்கிறேன். அருமைச்சகோதரரே நன்றாக விளங்கிக்கொள்ளுங்கள். முஸ்லிம் அமைச்சர்களிலேயே பொதுபலசேனாவினது பிரச்சினையை ரிசாத் பதியுதின் சேர் அவர்கள் எதிர்கொண்டளவுக்கு எவரும் எதிர்கொண்டதாக தெரியாது. இதனை எந்தவொரு உண்மையான முஸ்லிமும் மறுக்க முடியாது. அப்போது இருந்த சூழலில் அவர் அரசை விட்டுவிலகி இருந்தால் இதை விட அதிகமான விளைவுகளை சந்திக்க நேர்ந்திருக்கும், அரசுக்குள் இருந்ததனால்தான் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தன்னால் முடியுமான பங்களிப்பைச் செய்தார். பல நால் அநியாயங்களுக்கு ஒரு நாள் அல்லாஹ்வின் விடிவு வரும் என்பது ஒரு முஸ்லிமின் நம்பிக்கை. அல்ஹம்துலில்லாஹ். தற்போது அந்த தருணத்தை இறைவன் ஏற்படுத்தி தந்திருக்கிறான் என்பது பட்டவர்த்தனமாகும். இதுவேதான் உண்மை. அல்லாஹ் எல்லோருக்கும் அருள்புரிவானாக.
ReplyDeleteஎன்ன இருந்தாலும் இவர் Zero தான். இவர் Zero என்றால்.......இவருக்குப்பின் வந்த றௌஃப் ஹகீம்.......Triple Zero.
ReplyDeleteHero வாக இருந்துகொள்ள எத்தனையோ சந்தர்ப்பங்கள் இவர்களின் காலடியில் வந்து சேர்ந்தது, ஆனால் இப்பதான் முடிவு வந்துள்ளது. இங்கு செய்தியில் சொண்ணாற்போல்,இன்னும் இரு வருடங்களின் பின்னர் ஜனாதிபதி தேர்தல் வந்திருந்தால்,அப்போதுதான் இந்த காரணத்தை கண்டுபிடித்திருப்பார்.
நாடகக்காரனுக்கெல்லாம் நாடகக்காரன்
திட்டக்காரர்களுக்கெல்லாம் திட்டகாரன்
அவன் ஒருவனே. அவனின் முடிவை பார்ப்போம்.
அப்படி பார்த்தல் ஆசாத் சாலி 1000 மடங்கு உயர் வானவர் இவர்களை விட முஸ்லிம்களின் எல்லா பிரச்சினை களிலும் அயராது உழைத்தவர், முஸ்லிம்களுக்கா சர்வ தேசத்திலும் குரல் கொடுத்தவர் இத முஸ்லிம் கல் மறக்க மாட்டார்கள்
ReplyDeleteMuslims. Already lost there trust in Muslim politicians its proof in badulla district election. .honestly they don't bother what rishad or hakeems decisions.REMEMBER. Muslim people are victims of this government not politicians
ReplyDelete