Header Ads



முஸ்லிம் காங்கிரஸின் தீர்மானத்தை வரவேற்று, வீதிகளில் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சி

பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு மு.கா. ஆதரவு வழங்கும் என அந்தக் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் இன்று அறிவித்ததை அடுத்து, கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் வீதிகளில் கூடி பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சி ஆரவாரம் செய்து வருகின்றனர்.

முஸ்லிம் மக்கள் பெரும்பாலானோர் மைத்திரிபாலவை ஆதரிக்கவே திட்டமிட்டுள்ளனர் என்று முன்னர் தகவல் வெளியாகியிருந்தது. எனினும் கட்சித் தலைமை முடிவை அறிவிக்கத் தாமதமானதால் மக்கள் அமைதியாக இருந்தனர்.

இந்நிலையில் அரசிலிருந்து வெளியேறி பொது வேட்பாளரை ஆதரிக்கும் முடிவை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அறிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று 28-12-2014 நடைபெற்ற ஊடக மாநாட்டில் இந்த முடிவை அவர் அறிவித்துள்ளார்.

பொது எதிரணி வேட்பாளரை ஆதரிக்கும் முஸ்லிம் காங்கிரசின் தீர்மானத்தை வரவேற்றுள்ள முஸ்லிம் மக்கள், வீதிகளில் ஒன்றுதிரண்டு பட்டாசு கொளுத்தி கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

3 comments:

  1. இவர் பெருவல பிரச்சினைல தனது பதவிய விட்டு விலக போறான் என்று சொல்லி இவ்வளவு காலம் கழிந்து விட்டது, அந்த நேரம் விலகி இருந்தால் பொது நலம் என்று சொல்லி இருக்கலாம். இப்ப இது அப்பட்ட சுய நலம். மக்கள் முடிவெடுத்து விட்டார்கள் மைதிரிக்கு ஆதரவு என்று, இவரின் அரசியல் பயணம் முடிந்து விடும் என்ற பயத்தில் இவர் வந்து இருக்கார்.

    ReplyDelete
  2. ALLAHU AKBAR.VETRY NICHAYAM.

    ReplyDelete
  3. Porumaiye Vetri in Vali..

    ReplyDelete

Powered by Blogger.