Header Ads



பாராளுமன்ற உறுப்பினரின் விலை 5 கோடி, பிரதேசசபை உறுப்பினர் ஒருகோடியே 50 லட்சம்

நாடு அண்மைய கால வரலாற்றில் பாரிய பொருளாதார வீழ்ச்சியை எதிர்நோக்கியிருப்பதாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மூலம் பணம் கொள்ளையிடப்பட்டமையே இந்த பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.

மக்கள் அதிகாலையில் எழுந்ததும் யார் எந்த பக்கம் தாவினர், யார் தாவ போகின்றனர் என்பதையே பார்க்கின்றனர். என்ன அரசியல் இது?.

பணத்திற்கு விற்பனையாகும் நாடாளுமன்ற உறுப்பினர்களே நாட்டில் இருக்கிறனர். பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாவுக்கு விற்பனையாகிறார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்றால் 5 கோடி ரூபா.

திஸ்ஸ அத்தநாயக்கவை பாருங்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் அரசாங்கத்தை தோலுரித்தார். மூன்று நாட்களின் பின்னர் அரசாங்கத்திற்கு சென்று அரசாங்கத்தின் செயற்பாடுகளை வர்ணித்து வருகிறார் எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.