முஸ்லிம்களை புலிகள் வெட்டிக்குவித்த சமயத்தில், மைத்திரிபால ஒருவார்தை கூட பேசவில்லை - அஸ்வர்
முஸ்லிம் விரோதிகளான அத்துரலிய தேரர், சம்பிக்க ரணவக்க, சரத் பொன்சேக்கா, சந்திரிக்கா குமாரதுங்க ஆகியோருடன் இணைந்து அரசியல் செய்ய ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாட் பதியுதீனுக்கு எவ்வாறு மனம் வந்ததென ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் அல்ஹாஜ் ஏ. எச். எம். அஸ்வர் கேள்வி எழுப்பியுள்ளார்.
எதிரணி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன முஸ்லிம்களுக்காக எச்சந்தர்ப்பத்திலும் குரல் கொடுக்காதவர், இவரை நாட்டின் ஜனாதிபதியாக மக்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.
கம்பஹா மாவட்டத்தின் பியகம, கிரிந்திவெல, நிட்டம்புவ, மினுவாங்கொடை ஆகிய பிரதேசங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து நடைபெற்ற பிரதான பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
ஜாதிக்க ஹெல உருமயவைச் சேர்ந்த அத்துரலிய தேரரே முதன் முதலில் ஹலால் பிரச்சினையை கிளப்பி விட்டார். காவியுடை அணிந்த அனைவரையும் அழைத்துச் சென்று அக்குரணையிலும் ஏனைய இடங்களிலும் ஆர்ப்பாட்டம் செய்தார். இவருடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ¤ம் ஸ்ரீலங்கா மக்கள் காங்கிரஸ¤ம் ஒன்று சேருவது எப்படி.
“அதான்” ஒலிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகக் கூறி உயர் நீதிமன்றத்துக்குச் சென்றவர் சம்பிக்க ரணவக்க. இவருடன் ரவூப் ஹக்கீமும் ரிஷாட் பதியுதீனும் எந்த மனத்துடன் ஒன்று சேர்ந்தனர். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட சரத் பொன்சேகா, முஸ்லிம்களை இந்நாட்டின் வந்தேறு குடிகளெனவும் அவர்களது வீஸா காலம் முடிந்துவிட்டது. அவர்கள் வந்த இடத்திற்கே திரும்பிவிடலாமென வெளிநாட்டுப் பத்திரிகைகளுக்கு கூறியிருந்தார். இவர் ஆதரவு வழங்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கு முஸ்லிம்கள் எப்படி ஆதரவளிப்பது.
இதேபோன்று தான், பிரசார மேடைகளில் முஸ்லிம் பேச்சாளர்களை ஏற்றக் கூடாது என்ற உறுதிப்பாட்டில் மைத்திரிபால சிறிசேன உள்ளார்.பொலன்னறுவையில் பரம்பரையாக நெல்குத்தும் ஆலைகளை செய்து வந்த பணக்கார முஸ்லிம்களுக்குச் சொந்தமான 53 ஆலைகளை இரவோடு இரவாக மூடி அவர்களை நடுத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தியவர் இந்த மைத்திரிபால சிறிசேனா என்பதனை எமது முஸ்லிம்கள் மறந்துவிடமாட்டார்கள். புலிகள், பொலன்னறுவை மாவட்டத்தின் அழிஞ்தபொத்தானை, பள்ளித்திடல் போன்ற கிராமங்களுக்குள் புகுந்து முஸ்லிம்களை மீன்களைப் போல வெட்டிக் குவித்த சமயத்தில் கூட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளராக பதவி வகித்த மைத்திரிபால சிறிசேன அதுபற்றி ஒரு வார்தை கூட பேசியிருக்கவில்லை.
எப்படியோ ஹக்கீமும் ரிசாட்டும் அமைச்சின் சுகபோகங்களையெல்லாம் அனுபவித்துவிட்டு நம்பியிருந்த ஜனாதிபதிக்கு துரோகம் இழைத்துவிட்டு வரலாற்றில் மிகப்பெரிய பல்டியை அடித்தாலும், அந்தக் கட்சிகளின் கீழ்மட்ட உறுப்பினர்கள் ஜனாதிபதியை கைவிடவில்லை. அதாவுல்லா, ஹிஸ்புல்லா. சட்டத்தரணி என். எம். சஹீட் போன்றவர்கள் நிலைகுலையாமல் நின்று நம்பிக்கைத் துரோகம் செய்வது ஜனாதிபதிக்கு ஆதரவு அளிப்பதற்கு வீராவேசத்தோடு புறப்பட்டிருப்பது முஸ்லிம்களின் மானம் மரியாதையை காப்பாற்றப்பட்டிருப்பதாகவும் அவர் தனது உரையில் தெரிவித்தார்.
.jpg)
அவர்கள் துரோகம் செய்யவில்லை மாறாக அவர்கள் தன் இனத்துக்காக அனுபவித்த சகல பாக்கியங்களையும் தூக்கி வீசிவிட்டு வந்தவர்கள் ஒரு விடயத்தை இவ்வாறு புலம்பித்திரிபவர்கள் புரிந்துகொள்ளவேண்டும் இவர்கள் ம்மக்களால தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் அஸ்வர் போன்று வால்பிடித்து வந்தவரகள் இல்லை அமைச்சுப்பதவிகளைப் பெற்று சுகபோகம் அனுபவிப்பது உலக வழமை அமைச்சர் என்றால் சொகுசு வாகனத்தில்தான் போக வேண்டும்மாட்டுவண்டியிலா போவது ஐந்து நட்சத்திர ஹோட்டல்லதான் தங்கவேண்டும் தோசக்கடையில் சாப்பிட்டு பாதசாரியில் தூங்குவதில்லை அரசாங்கம் ஓசியில ஒன்றும் கொடுக்கவில்லை ஏதோ அவர்கள்மூலம் பெரும் பிரயோசனம் அடைந்துவிட்டுத்தான் கொடுக்கப்படுகிறது அதேவேளை எந்த அமைச்சரும் அனுபவிப்பது மஹிந்த குடு்பத்தின் சொத்து அல்ல இது பொதுமக்களின் சொத்து அதை பொதுமக்கள் ிரதிநிதி வீண்விரையம் இல்லாமல் அனுபவிக்கலாம் அதை பாவிக்கும்போதுதான் பொதுமக்களுக்கு சேவை செய்ய முடியும் முஸ்லிம் எம்பிக்களை சந்திக்கு சந்தி தூற்றித்திரியும் அஸவர் ஏன் அரசில்இருந்து வெளியேறிய சிங்கள எம்பிக்கள் அனுபவித்ததை சொல்வதில்லை ஆனால் ஒரு விடயம் கியாம நாள்வரை இனி அஸ்வருக்கு பாராளுமன்ற அங்கத்துவம் கிடையாது
ReplyDeleteபள்ளிவாசல்கள் உடைக்கப்படும் போது அப்படி ஒன்றும் நல்லடக்க வில்லை எனறு அறிக்கை விட்டவர் தானே நீங்கள்.?
ReplyDeleteஅல்லாஹ் உம்மையும் நீர் சாந்த கூட்டத்தையும் தோற்கடித்து அவன் இல்லங்களை உடைத்த அல் குர் ஆனை தூசித்த கூட்டத்தாரையும் கண்டிப்பாக பார்த்துக்கொள்வான்.
ReplyDelete