இஸ்ரேல் ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டுவரும் பலஸ்தீன தீர்மானம், பாதுகாப்புச் சபையில் நிராகரிப்பு
இஸ்ரேலுடன் ஓர் ஆண்டுக்குள் அமைதியை ஏற்படுத்துவது மற்றும் 2017இல் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டுவரும் பலஸ்தீன தீர்மானம் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் நிராகரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு தேவையான ஒன்பது பெரும்பான்மை வாக்குகளை பெறுவதற்கு இந்த வரைவு தவறியது.
கடந்த செவ்வாய்க்கிழமை நிய+யோர்க்கில் பாதுகாப்புச் சபையில் கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானத்திற்கு ரஷ்யா மற்றும் பிரான்ஸ் உட்பட எட்டு நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா எதிராக வாக்களித்ததோடு ஐந்து நாடுகள் வாக்களிப்பதை தவிர்த்துக்கொண்டன.
தீர்மானத்திற்கு ஆதரவாக ஒன்பது வாக்குகள் கிடைத்திருந்தாலும் பாதுகாப்புச் சபையின் நிரந்தர அங்கத்துவ நாடான அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அதனை நிராகரிக்க தயாராக இருந்தது.
தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்கு கிடைக்கா தது குறித்து ஐ.நாவுக்கான பலஸ்தீன தூதுவர் ரியாத் மன்சூர் அதிருப்தி வெளியிட்டுள்ளார். "இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாணும் பாதுகாப்புச் சபையின் பொறுப்பில் இருந்து அது மற்றுமொரு முறை தவறியுள்ளது. அர்த்தமுள்ள தனது சொந்த தீர்மானம் ஒன்றை கொண்டுவரவும் அது தவறியுள்ளது" என்று மன்சூர் குறிப்பிட்டுள்ளார்.
"இந்த ஆண்டிலும் எமது மக்கள் இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் மேலும் கொள்ளை மற்றும் தனது நிலங்களில் குடியேற்றங்கள், நாளாந்த இராணுவ சுற்றிவளைப்புகள், கைது நடவடிக்கைகள் மற்றும் சிறுவர்கள் உட்பட சிவிலியன்கள் தடுத்துவைக்கப் படுவது, குடியேறிகளின் பயங்கரவாதம், மனித கௌரவத்திற்கு அவமானத்தை, புனிதத்தலத்தின் மீது தொடர்ச்சியான அத்துமீறல்களை சகித்து வருகிறார்கள்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த இஸ்ரேலின் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்கா குறித்த வரைவுக்கான எதிர்ப்பை மீண்டும் ஒருமுறை உறுதி செய்தது. இந்த தீர்மானம் இரு மக்களுக்கான இரு நாட்டை எட்டுவதற்கான முயற்சியை பலவீனப்படுத்துவதாக ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் சமன்தா பொவர் குறிப்பிட்டுள்ளார். "இந்த தீர்மானம் சமநிலையற்று இருக்கிறது. குறிப்பாக ஆக்கபு+ர்வமற்ற காலக்கெடு, இஸ்ரே லின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமை உட்பட பல விடயங்கள் குறித்த பேச்சுவார்த் தைக்கு இந்த தீர்மானம் வாய்ப்பு வழங்க வில்லை" என்று பொவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐ.நா. பாதுகாப்புச் சபையில் தற்போது ஒரே அரபு பிரதிநிதித்துவத்தை பெற்றிருக்கும் ஜோர்தான் இந்த தீர்மானத்தை சமர்ப்பித்திருந் தது. இதில் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் கிழக்கு nஜரூசலம் பலஸ்தீனத்தின் தலைநகர் என்றும் இஸ்ரேல் குடியேற்ற கட்டடங்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்றும் பலஸ்தீன கைதிகளை விடுவிக்கும் விடயத்தில் தீர்வு எட்டப்பட வேண்டும் என்றும் இந்த தீர்மானத்தில் கோரப்பட்டிருந்தது. தவிர, 1967 ஆம் ஆண்டு மேற்குக் கரை, கிழக்கு nஜரூசலம் மற்றும் காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிக்க முன்னர் இருந்த பலஸ்தீன எல்லைகளை அடிப்படையாகக் கொண்டே பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று இந்த தீர்மானம் வலியுறுத்தியுள்ளது.
இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் பாதுகாப்புச் சபையில் இருக்கும் ஐரோப்பிய மற்றும் ஆபிரிக்க முகாம்கள் பிளவுபட்டே வாக்களித்தன. ஐரோப்போவில் பிரான்ஸ் மற்றும் லக்சன்பேர்க் நாடுகள் இதற்கு ஆதரவாக வாக்களித்த அதேவேளை பிரிட்டன் மற்றும் லிதுவேனியா வாக்களிப்பதை தவிர்த்துக்கொண் டன. ஆபிரிக்காவில் சாட் நாடு ஆதரவாகவும் ருவண்டா மற்றும் நைஜPரியா வாக்களிப்பதை தவிர்த்துக் கொண்டும் இருந்தன.
தவிர சீனா, ஆர்ஜன்டீனா, ஜோர்தான் மற்றும் சிலி நாடுகள் ஆதரவாக வாக்களித்ததோடு வாக்களிக்காத நாடுகளில் கொரிய குடியரசும் அடங்கும். பலஸ்தீனம் தற்போது அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராவதாக ரியாத் மன்சூர் குறிப்பிட்டார். இந்த தீர்மானம் வெற்றிபெறத் தவறினால் இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தில் இணையப்போவதாக பலஸ்தீனம் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment