முஸ்லிம்கள் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை, எவராலும் சீர்குலைக்க முடியாது - மஹிந்த சூளுரை
முஸ்லிம்களை எம்மிடமிருந்து பிரிப்பதற்கு எவராலும் முடியாது. அவ்வாறு பிரிப்பதற்கு சிலர் எடுக்கும் முயற்சிகள் அனைத்துமே தோல்விகளையே கண்டுள்ளன என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வரலாற்றில் இவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டே வந்தன. இம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் போதும் இந்த முயற்சிகள் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளன. எனினும் இந்த நாட்டில் வாழுகின்ற முஸ்லிம் மக்கள் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை சீர்குலைக்க எவராலும் எந்த காலகட்டத்திலும் முடியாது என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
ஐவேளைத் தொழுகைக்கான ‘அதான்’ சொல்லும் போட்டியின் இறுதிச் சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்றோருக்கான பரிசு வழங்கும் நிகழ்வு ‘தாமரைத் தடாகம்’ அரங்கில் நடைபெற்ற போது பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பேசும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். சிங்கள, முஸ்லிம் இன நல்லிணக்கத்துக்கான தேசிய வேலைத்திட்டத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு நடைபெற்றது.
அரசு என்ற வகையில் சகல இன மக்களினதும் சகல மதத்தினரினதும் உரிமைகளை பாதுகாப்பதற்கு கடப்பாடுடையவர்களாகவே இருக்கிறோம். சகல இன மக்களினதும் கோரிக்கைகளை செவிமடுப்பதற்கும் அரசு எவ்வேளையிலும் நடவடிக்கை எடுத்தே வந்துள்ளது.
பலஸ்தீன நட்புறவு சங்கத்தின் தலைவராக அன்று இந்த நாட்டிலுள்ள முஸ்லிம் மக்களுக்காக மட்டுமல்ல சர்வதேச நாடுகளிலுள்ள முஸ்லிம் மக்களுக்காகவும் குரல் கொடுத்தமையை இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்கள் மறந்து இருக்கமாட்டார்கள். அன்று இந்த மக்களுக்காக குரல் கொடுத்தது போன்று எதிர்காலத்திலும் இந்த மக்களுக்காக குரல் கொடுக்க முன்வருவேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

உங்கள் சகோதரர் கோத்தா கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு செய்தவற்றை நினைத்தால் உங்கள் மீது நம்பிக்கை இல்லாமலா போகும்.?
ReplyDeleteCan you make the same speech with BBS monks and act accordingly, then we can trust your words.
ReplyDeleteஎந்த முஸ்லிமுடைய வாக்கும் உனக்கு கிடையாது தப்பி தவறி யாராவது போடுவார்களாக இருப்பின் அவர்கள் சுயனலவாதிகள்தான்.
ReplyDeletekick out your brother Kotha terrorist .
ReplyDelete