ரவூப் ஹக்கீம் மீண்டும் வந்தால், நான் அரசாங்கத்திலிருந்து வெளியேறிவிடுவேன் - தயாரத்னா
அம்பாறை மாவட்டத்தில் கரையோர முஸ்லிம் அலகொன்றை ஸ்தாபிக்க இடமளித்தால் மாவட்டத்தில் சிறுபான்மைக்குள் சிறுபான்மையாகவுள்ள இன்னுமொரு சமுகம் நிச்சயம் பாதிக்கப்படும். ஜக்கிய இலங்கைக்குள் இனரீதியான அலகை உருவாக்குவதென்பது நாட்டைப் பிரிப்பதற்குச் சமானமாகும். அதற்கு நானோ ஜனாதிபதியோ ஒரு போதும் இடமளிக்கமாட்டோம்.
இவ்வாறு சிரேஸ்ட அமைச்சர் பி.தயாரத்னா அம்பாறை மாவட்ட ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அமைப்பாளர்கள் தேர்தல் இணைப்பாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில் சூளுரைத்தார். இக்கூட்டம் அம்பாறை ஜ.ம.சு.க. அலுவலகத்தில் நடைபெற்றது. சிங்கள தமிழ் முஸ்லிம் அமைப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். எதிர்வரும் தேர்தல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் அமைப்பாளர்களின் செயற்பாடு தொடர்பாகவும் அமைச்சர் எடுத்தியம்பினார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்:
ஜக்கிய இலங்கைக்குள் அனைத்து இன மக்களும் சந்தோசமான ஒற்றுமையுடன் வாழவேண்டும். அந்த உயரிய சிந்தனையில் செயற்பட்டுவரும் எமது ஜனாதிபதி இப்படி குறுகிய நோக்கம்கொண்ட இனவாத சிந்தனைக்கு இடமளிப்பாரா? ஒரு போதும் இல்லை. நானும் அதற்கு இடமளியேன்.
அமைச்சர் ஹக்கீம் போவதும் வருவதும் புதியவிடயமல்ல. ஆனால் இம்முறை இப்படியான ஒரு கோரிக்கையை முன்வைத்து வெளியேறியது கபடநாடகமாகும்.
எமது ஜனாதிபதி வென்றதும் மீண்டும் ஏதாவது பிராயச்சித்தம் தனிமாவட்டம் என்றுகூறிக்கொண்டு திரும்பிவர முயற்சிப்பார். அத்தகைய கேள்விக்கே இடமில்லை. அவர் நினைத்தால் போவதற்கும் வருவதற்கும் இது சத்திரமல்ல.
அவர் அப்படி திரும்பி வருவதற்கு ஒருவேளை ஜனாதிபதி இடமளித்தால் மறுகணம் கட்சியை விட்டு வெளியேறும் முதல் அமைச்சர் நானாகத்தானிருப்பேன். ஜனாதிபதியும் இடமளிக்கமாட்டார் என்ற நம்பிக்கை நிறையவுண்டு. என்றார்.
.jpg)
Post a Comment