Header Ads



சுவிட்சர்லாந்தின் இவ்வாண்டுக்கான சிறந்த நபராக இமாம் முஸ்தபா தெரிவு


சுவிட்சர்லாந்தின் வார பத்திரிக்கை ஒன்று இந்த ஆண்டின் சுவிஸ் நபர் என்று, பெர்னை சேர்ந்த இமாம் முஸ்தபாவை தெரிவு செய்துள்ளது.

சுவிஸின் பிரபல வார பத்திரிக்கையான SonntagsZeitung, அவரது நேர்மையும், பிரச்சனை மிகுந்த விடயத்தில் துணிந்து அவர் விவாதித்ததாலும் இந்த விருதை வழங்குவதாக அறிவித்துள்ளது.

2014ம் ஆண்டில், செய்தித்தாள்களை இஸ்லாமிய மதம் ஆக்கிரமித்திருந்ததாகவும், இமாம் முஸ்தபா வெளிப்படையாக மத சகிப்புத்தன்மையை ஆதரவளித்ததுடன், முஸ்லிமை ஒருங்கிணைத்ததாக தெரிவித்துள்ளனர்.

அந்த பத்திரிக்கைக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில், எங்களுக்கு பயங்கரவாதமும், தீவிரவாதமும் தொடர் சவால்களாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

பெர்னில் உள்ள முஸ்லிம் இயக்கதின் இமாமாக இருக்கும் இவர், அல்பானியாவில் பிறந்த செர்பியன் ஆவார். 1991ம் ஆண்டு முதல் சுவிஸில் வசித்துவரும் இவர், 2005ம் ஆண்டு சுவிஸின் குடியுரிமையை பெற்றுள்ளார்.

அவர் கூறுகையில், சுவிஸில் வாழும் பல முஸ்லிம்கள் தங்கள் அடையாளத்தினை இழக்க அச்சப்படுகின்றனர். இன்று இருக்கும் இளைஞர்களால் இமாமாகவும், சுவிஸ் குடிமகனாகவும் இருக்க முடியும்.

உங்கள் மத அடையாளங்களை இழக்காமல் நீங்கள் ஒருங்கிணைய முடியும்.

மேலும், மதம் மற்றவர்களை நம்மிடம் இருந்து பிரிப்பதாக இருக்க கூடாது என்றும் மக்களை ஒன்றினைக்க அது உதவ வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.