Header Ads



பொது எதி­ர­ணியின் வெற்­றியில், முஸ்லிம் காங்­கிரஸ் பங்­கெ­டுக்கும் - ராஜித சேனா­ரத்ன

எமது தேசிய அர­சாங்­கத்தில் ஒற்­று­மையும் சமத்­து­வ­முமே நிலை­நாட்­டப்­படும். தேசிய அரசில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் உண்­மை­யான ஒத்­து­ழைப்­பினை எதிர்­பார்க்­கின்றோம் என தெரி­விக்கும் முன்னாள் அமைச்­சரும் பொது எதி­ர­ணியின் முக்­கிய உறுப்­பி­ன­ரு­மான ராஜித சேனா­ரத்ன, பொது எதி­ர­ணியின் வெற்­றியில்கூட்­ட­மைப்பு, முஸ்லிம் காங்­கிரஸ் பங்­கெ­டுக்கும் எனவும் நம்­பு­வ­தாக தெரி­வித்தார்.

பொது எதி­ர­ணியின் செயற்­பாட்டில் சிறு­பான்மை மக்­களின் பங்கு எவ்­வா­றா­னது என வின­விய போது அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

சர்­வா­தி­கார ஆட்­சிக்கு முற்­றுப்­புள்ளி வைத்து சமா­தா­ன­மா­னதும் அனைத்து மக்­களின் உரி­மை­களை வென்­றெ­டுக்கும் அர­சாங்­க­மொன்­றினை உரு­வாக்­கு­வதே பொது எதி­ர­ணியின் பிர­தான இலக்கு. நாட்டை சரி­யான பாதையில் வழி நடத்த வேண்டும்.

மக்­களின் உரி­மை­களை வென்­றெ­டுக்க வேண்டும். அதற்­கா­கவே நாம் ஆட்சி மாற்­றத்­திற்­கான போராட்­டத்­தினை ஆரம்­பித்­துள்ளோம். மேலும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு உட்­பட தமிழ் பிரதி நிதித்­துவம் சரி­யான முடி­வினை எடுக்கும் என எமக்கு நம்­பிக்கை உண்டு. அதேபோல் முஸ்லிம் மக்­களின் பிரதி நிதித்­து­வமும் தற்­போது சரி­யாக செயற்­பட வேண்டும் என வலி­யு­றுத்­து­கின்றோம்.

எனவே எமது தேசிய அர­சாங்­கத்தில் சிங்­கள பிர­தி­நி­தித்­து­வத்தின் ஒத்­து­ழைப்பு எவ்­வாறோ அதேபோல் தமிழ் முஸ்லிம் மக்­களின் பிர­தி­நி­தித்­து­வமும் மிகச் சரி­யா­ன­தா­கவும் உதவக் கூடிய வகை­யிலும் அமைய வேண்டும். தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு போன்ற தமிழ் மக்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் கட்­சிகள் எமது தேசிய அர­சாங்­கத்தில் உண்­மை­யா­ன­தா­கவும் ஆத­ர­வா­கவும் செயற்­பட வேண்டும் என்­பதே எமது எதிர்­பார்ப்பு.

அதேபோல் இம்­முறை நாம் ஜன­நா­ய­கத்­தினை வென்­றெ­டுக்கும் புனிதப் போராட்­டத்தில் ஒன்று திரண்­டுள்ளோம். மக்­க­ளையும் நாட்­டையும் காப்­பாற்ற எமக்கு கிடைத்­துள்ள இறுதி சந்­தர்ப்­ப­மாகக் கூட இது அமை­யலாம். எனவே இப் பொதுப் போராட்­டத்தில் பொது எதி­ர­ணியின் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் ஆகிய கட்­சிகள் எம்மை பலப்படுத்தி பொது எதிரணியினை ஆதரிக்கும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. காலம் காத்திருக்கின்றது. வெகு விரைவில் மாற்றத்திற்கான பலம் அதிகரிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

1 comment:

  1. Dear Sir Rajitha Sena Ratna,

    Don't worry if they support or not but most of the Minorities have decided to support for your victory. Few Idiots will follow their leaders but it is also unsure. Cheating their leaders, they may vote for MY3.

    ReplyDelete

Powered by Blogger.