மீண்டும் கட்சி மாறமாட்டேன் - தினகரன் பத்திரிகை செய்தியை மறுக்கிறார் ஹுனைஸ் பாருக்
பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனா அறிவிக்கபட்டவுடன், முதன்முதலில் ஆளும் கட்சியலிருந்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு வந்த முஸ்லிம் நானே. ஐக்கிய தேசிய கட்சியின் வன்னி மாவட்ட பிரதான அமைப்பாளர் பதவியும் தற்போது எனக்கு கிடைத்துள்ளது. இந்நிலையில் நான் ஒருபோதும் கட்சி மாறமாட்டேன் என பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக் தெரிவித்தார்.
இதுதொடர்பில் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு தொலைபேசி மூலமாக சற்றுமுன்னர் கருத்து தெரிவித்த ஹுனைஸ் பாருக் மேலும் கூறியதாவது,
நான் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்த பின், எனக்கெதிராக ஊடகங்கள் மிகமோசமான தாக்குதலை மேற்கொண்டன. அந்தவேளையில் ஹுனைஸ் பாருக் ஆகிய நான் பணத்திற்காக விலை போகவில்லை என்ற செய்தியை மக்கள் மத்தியில் துணிவுடன் கொண்டுசென்ற ஊடகமே ஜப்னா முஸ்லிம் இணையமாகும். அன்றும் இன்றும் அது நடுநிலை போக்குடனே செயற்படுகிறது.
(அரசாங்கத்துடன் மீண்டும் ஹுனைஸ் பாருக் ..? அமைச்சுப் பதவியும் வழங்கப்படும்..??) என்ற தலைப்பில் ஜப்னா முஸ்லிம் இணையம் வெளியிட்ட தகவல் கூட, 28-12-2014 அன்று வெளியான தினகரன் வாரமஞ்சரி பத்திரிகையின் செய்தியே ஆகும்.
அதேவேளை எக்காரணம் கொண்டும் நான் கட்சி மாறமாட்டேன். அமைச்சுப் பதவிகள் எனக்கு பொருட்டல்ல. எனக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கை குறைக்க வேண்டுமென்பதற்காகவே அரச ஊடகங்கள் இவ்வாறு திட்டமிட்டு செயற்படுகின்றன எனவும் ஹுனைஸ் பாருக் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு கூறினார்.
பிற்குறிப்பு - தினகரன் வாரமஞ்சரியில் வெளியாகி, அதனை மீள்பிரசுரித்த ஜப்னா முஸ்லிம் இணையமானது, (அரசாங்கத்துடன் மீண்டும் ஹுனைஸ் பாருக் ..? அமைச்சுப் பதவியும் வழங்கப்படும்..??) என்ற தனது முந்திய தகவலை தற்போது நீக்கிவிடுகிறது.

good job jaffnaMuslim.. please don't copy anything from government supported media!
ReplyDeleteWe Salute you Sir and You are greater than Mr. Rouf Hakeem as came last.
ReplyDeleteஉர்ஜிதமற்ற செவ்விகளைப் பிரசுரித்து வாசகர்கள் கலக்கமடைய வைப்பதற்கு உசிதமான நேரமல்ல இது. பிரசுரிப்பதற்கும் நீக்குவதற்கும் இடையில் எத்தனையோ அசம்பாவிதங்கள் நடந்து முடியலாம். இதற்கு முன்பும் இது போன்று பிரசுரித்து பின் நீக்கிய சம்பவங்கள் உண்டு. எமது அன்புக்குரிய jaffna muslim இடம் இதைத் தயவுடன் வேண்டுகிறோம்.
ReplyDelete