முஸ்லிம்களுக்கு உதவக்கூடிய, நம்பிக்கை வைக்கக்கூடிய ஒருவரை தெரிவு செய்யவேண்டும்
(தொகுப்பு ஜே.எம்.ஹாபீஸ்)
பாத்ததும்பறைப் பிரதேச சபை அங்கத்தவரும் மத்திய மாகாண சபை முன்னாள் வேட்பாளருமான றஹ்மத்துல் மலீக் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக விடுத்துள்ள ஒரு வேண்டுகோளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.
கடந்தகால வரலாற்றை நோக்கும் போது இலங்கை முஸ்லீம்கள் தாய் நாட்டுக்கு விசுவாசமாக நடந்த பல சம்பவங்கள் உண்டு. இரண்டாம் இராஜசிங்கன் மன்னன் காலத்தில் அரசனை காட்டிக் கொடுக்காத காரணத்தால் முஸ்லிம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவமும் அதன் பிரதி பலனாக பங்கரகம்மன என்ற கிராமம் முஸ்லிம்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட வரலாறும் பாடப்புத்தகங்களில் உண்டு.
அதேபோல் சிங்கள மன்னர்கள் காலத்தில் வைத்திய துறையில் சாதனைகள் படைத்து முஸ்லிமகள் சிங்கள மன்னர்களது மனதை வென்ற வரலாறுகள் பல உண்டு. தொண்டு தொட்டு வழங்கி வரும் பல்வேறு புராதனக் கதைகள் பல சிங்கள முஸ்லிம் உறவை பறை சாற்றுகின்றன. இன்று கூட சில 'வளவ்வை'களில் முஸ்லிம்களுக்கு தனி மரியாதை உண்டு. எமது பாட்டன் பூட்டன் பெயர்களைக் கூறி இன்றை பாரம்பரிய சிங்கள சமூகத்தில் பல்வேறு அன்யோன்யங்களை அடைந்து வரும் சந்தர்ப்பங்களும் உண்டு.
பண்டைய சிங்கள மன்னர்கள் முஸ்லீம்கள் மீதிருந்த விசுவாசத்தின் காரணமாக வழங்கப்பட்ட பாரம்பரிய குடும்பப் பெயர்களை இன்றும் நாம் பயன் படுத்தி வருகின்றோம். உதாரணத்திற்கு- விதானலாகெதர, முஹம்திரம்லாகெதர, இரத்ன முதியான்சலாகே கெதர, வைத்திய ரத்ன முதியான்சலாகே கெதர, பட்டி முஹம்திரம்லாகே கெதர, .... இப்படிக் கூறிக் கொண்டே போகலாம். இது மலையக முஸ்லீம்களுக்கு மட்டு மல்ல. கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் யானைப் பணிக்கன் .... என்ற பெயர் கொண்ட பரம்பரையும் உண்டு. எனக்குத் தெரிந்த ஒரு ஆசிரியர் இன்று கூட அம்பாறை இறக்காமத்தில் யானைப் பணிக்கள் என்ற குடும்பப் பெயருடன் வாழ்ந்து வருகிறார்.
ஆயிரம் ரூபா நோட்டில் ஸ்ரீ தலதா மாளிகைக்கு யானை பிடித்து வழங்கியவரது உருவப்படம் சித்தரிக்கப்பட்டுள்ளது. இவை பலம் பெருமை பேசும் விடயம் என விட்டு விடுவோமே.
1993ம் ஆண்டு அரசியல் குற்றப் பிரேரணை பாராளுமன்றில் கொண்டு வரப்பட்டது. அதாவது அன்றை ஜனாதிபதி ஆர். பிரேமதாச விற்கு எதிராக . இது பெரிய சர்ச்சையை உருவாக்கிய விடயம். அந்நேரம் சபாநாயகராக இருந்தவர் அல்ஹாஜ் எம்.எச்.முஹம்மத். அவர் நம்பிக்கை தவறாது கரும மாற்றியமை தெரிந்த விடயம். மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களுக்கும் சநதிரிகா அம்மையாருக்குமிடையே ஒரு ஒப்பந்தம நடந்தது. சந்திரகாவிற்கு ஆட்சி அமைக்க அஷ்ரப் அவர்கள் உதவுவதாக அந்த ஒப்பந்தம் இருந்தது. இதே நேரம் 1994ம் ஆண்டு டி.பி.விஜேதுங்க காலத்தில் சந்திரிகா அம்மையாருக்கு அதிகாரத்தை வழங்க (ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த) ஒரே ஒரு வாக்கு தேவைப்பட்டது. அதனை கட்சிதமாக மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் நிறைவேற்றினார். அந்த இடத்தில் அவா பதவி மோகத்ததால் வார்த்தை மாற முடியும். ஆனால் அப்படிச் செய்யவில்லை. அது அன்று நடந்திரா விடடால் இன்று வரை ஐ.தே.க.யே ஆட்சியில் இருந்திருக்கும்.
அதேபோல் யுத்த காலத்தில் முஸ்லிம் படை வீரர்கள் மிகவும் நம்பிக்கையான முறையில் உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். துவான் முத்தலிப், மீடின், பஸ்லி லாபிர் போன்றவர்கள் அன்று அது தொடாபாகப் பெருமையாகப் பேசப்பட்டவர்கள், இன்று அரசின் புலனாய்வுப் பிரிவில் முஸ்லிம்கள் பலர் கடமை புரிகின்றனர். ஆர்.பிரேமதாச அவர்களது மரணத்தின் போதும் அவருக்கு பக்கத்தில் இருந்து நம்பிக்கையான முறையில் செயல்பட்டு தமது உயிரையும்நீத்த மொகிடீன் ஒரு முஸ்லீம். இப்படி அண்மைகால விடயங்களையும் அடிக்கிக் கொண்டு போகலாம்.
இப்போது விடயத்திற்கு வருவோம். இவ்வாறு வரலாற்றுச் சம்பவங்கள் பலவற்றின் மூலம் நம்பிக்கை கொண்ட மக்களாக வாழ்ந்த முஸ்லீம்களுக்கு 2010ம் ஆண்டு முதல் படிப்படியாக சோதனைகள் வந்தன. வரலாற்றின் என்று மில்லாத வகையில் முஸ்லீமகள்மீது நஞ்சுக் கருத்துக்கள் பரப்ப்பட்டன. அதுவும் இரகசியமாக அல்ல. மேடை அமைத்து அரச பாதுகாப்பிற்கு மத்தியில் பௌத்த துறவிகளை ஏவிவிட்டே இது நடந்தது. எனவே தான் இதனை வரலாறு காணாத வகையில் என்று கூற முடிகின்றது.
இதன் எதிர் விளைவுகளுக்கு நிறைய விலை கொடுத்தவர்கள் வடகிழக்கிற்கு வெளியே வாழும் முஸ்லீம்களாகும். இதன் தாக்கம் இன்றும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் ஏற்பட்ட இழப்புக்களையும் எதிர் காலத்தில் ஏற்பட உள்ள இழப்புக்களையும் கணக்கிட முடியாதுள்ளது. ஒரு சின்ன உதாரணம்தான் பேருவலை, தர்ஹா நகர மக்கள் கொடுத்த விலையைக் குறிப்பிடலாம். இதில் எதனையும் அரசு கண்டு கொள்ளாமல் உள்ளது. அப்படியான ஒரு அரசிற்கு புத்தி புகட்டுவது ஒவ்வொருவரதும் கடமையாகும்.
அதே நேரம் இயற்கை அனர்த்தம் உற்பட பல்வேறு சந்தர்ப்பங்களில் வடகிழக்கு மக்களுக்கு பிரச்சினை வந்த போது வடகிழக்கிற்கு வெளியே உள்ள முஸ்லிம்கள் தமது நேசக் கரத்தை நீட்டத் தவற வில்லை. குறிப்பாக வட பகுதியிலிருந்து நான்கே நான்கு மணித்தியாலத்தில் விரட்பட்ட அதிகளவு முஸ்லீம்களுக்கு புகழிடம் கொடுத்தோர் வடகிழக்கிற்கு வெளியே வாழும் முஸ்லிம்கள்தான். சுனாமியின் போது உதவிக் கரம் நீட்ட ஓடோடி வந்தவர்களும் வடகிழக்கிற்கு வெளியே உள்ள முஸ்லிமகள் தான்.
இதேபோல் கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் வடகிழ்கிற்கு வெளியே வாழும் முஸ்லிம்கள் எமது சகோதர இனத்திற்கு உதவினர். அதே நேரம் இன்று வடகிழக்கிற்கு வெளியே வாழும் முஸ்லீம்கள் அரசியல் ரீதியில் பிரச்சினைகனை எதிர் கொள்கின்றனர். எனவே வட, கிழக்கில் வாழும் முஸ்லிம்கள் ஏனைய பகுதிகளில் வாழும் முஸ்லீம்களது பிரச்சினைக்கு ஒரு உதவி செய்வது என்பது மானசீகமானதும் தார்மீக கமானது மான ஒரு கடைமையாகும். எனவே கூட்டு மொத்தமாக இலங்கை முஸ்லீம்கள் பிரச்சினைப் படுவதற்கு காரணமாக இருந்தவர்களையும், முஸ்லீம்களுக்கு இதுகாலவரை ஏற்படுத்திய துன்பங்களைக் காணதவர்களாகவும் இருந்த ஒரு கூட்டத்திற்கு பாடம் புகட்டும் நேரம் வந்துள்ளது. இதனை தவற விட்டால் இன்னும் எத்தனை வருடம் காத்திருக்க வேண்டி வரும் எனக் கூற முடியாது.
எனவே வடக்கு , கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே வாழும் முஸ்லிம்கள் வெளியே காட்டிக் கொள்ளாது அடக்கி வைத்துள்ள துன்பங்களுக்கு ஒரு முடிவுகட்ட வேண்டிய தருணம் வந்துள்ளது. கூட்டு மொத்தமான இலங்கை வாழ் முஸ்லிம் சகோதரர்களுக்கு செய்யும் உதவியாக தற்போதைய கொடுங்கோள் சர்வாதிகார ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப ஒவ்வொருவரும் உதவ வேண்டும்.அது மட்டுமல்ல அல்லாஹ் நாடியவர்களுக்கு ஆட்சியை வழங்குவான். அவன் நாடாதவர்களிடமிருந்து அதனைப் பறிப்பான்.
அல்லஹ் மீத விஸ்வாசம் கொண்ட மக்கள் அல்லாஹ் மீத நம்பிக்கை வைத்து சில பொறுப்புக்களைச சாட்டவேண்டியுள்ளது. அத்துடன் ஒரு விசுவாசியின் மிகப் பலம் பொருந்திய ஆயுதம் பிராத்தனையாகும். எனவே சகல முஸ்லீம்களும் எதிர்காலத்தில் முஸ்லீம்களுக்கு உதவி செய்யக் கூடிய, முஸ்லிம்கள் மீது நம்பிக்கை வைக்கக் கூடிய ஒரு தலைவன் வெற்றி பெற உதவ வேண்டும் என்ற அடிப்படையில் வசதிக்கேற்ப நோன்பு நோற்று தஹஜ்ஜத் தொழுது சகல பிராத்தனைகளிலும் நல்லாடச்சி ஏற்பட வேண்டுமென ஒரு பிராத்தனையையும் மேற்கொள்வது எமது கடமையாகும். மறைவான வற்றை அல்லாஹ்வே நன்கு அறிபவன். அவன் மீதும் நாம் தவக்குல் வைப்போம் என றஹ்மத்துல் மலீக் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரஹ்மத்துல் மலீக் அவர்களே, உங்களை போன்ற அரசியல் வாதில் நமது சமூகதில் பார்ப்பது அரிதாகவே உள்ளது. தற்போதைய அரசியல் நிலைமைக்கு அவசியமானதும் தேவையுமான கருத்தை சொன்னதற்கு மிக்க நன்றி. உங்களது பங்களிப்பை மேலும் எதிர்பார்கிறோம்.
ReplyDelete