இஸ்லாம் நன்றியணர்வை வெளிப்படுத்தும் மார்க்கம் என்பதை, மஹிந்தவுக்கு வாக்குகளை வழங்கி நிருபிக்கவேண்டும்
2009ஆம் ஆண்டு, மே மாதம் 18ந் திகதி பயங்கரவாதிகளிடமிருந்து இலங்கைக்கு இரண்டாவது சுதந்திரம் கிடைத்தது. நாம் பெற்ற அந்த அளப்பரிய யுத்த வெற்றி- எமது நாட்டுக்கும், எம் ஒவ்வொருவருக்கும் கிடைத்த பூரண சுதந்திரமாகும். அந்த வெற்றியில் ஒவ்வொரு முஸ்லிமும் பங்காளராயிருந்து செயற்பட்டிருக்கின்றோம். என்றுமே நாட்டின் தேசிய நலனில் முஸ்லிம்களின் வகிபாகம் ஆரோக்கியமானதாகவும், சிறப்பானதாகவும் அமைந்திருக்கிறது என நேற்றைய தினம் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து பேருவளையில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் சிங்கள முஸ்லிம் ஒருமைப்பாடு தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் இணைத் தலைவரும் ஜனாதிபதியின் மத்திய கிழக்கு விவகாரங்களுக்கான ஆலோசகருமான ஆலோசகருமான அஷ்ஷேய்க். அப்துல் காதர் மசூர் மௌலானா கருத்து தெரிவித்தார். மேலும் அவர் அங்கு உரையாற்றுகையில்,
தென் மாகாணத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் வரலாற்று சிறப்புகள் மிக்க பேருவளை மண்ணிலே, இந்த ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார மேடையிலே, இலங்கை எனும் எமது அழகிய தாய் தேசத்தில் கோரத் தாண்டவமாடிய பயங்கரவாதத்திலிருந்து விடுதலையையும், வளமான எதிர்காலத்தையும், சுந்தரத் தீவிற்கு சுபீட்சத்தையும்- சுதந்திரக் காற்றையும் சுவாசிக்கத் தந்த எமது தேசத்தின் ஆளுமை மிக்க தேசியத் தலைவர் அதிமேதகு மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில்-
பேரன்பும் பெரு நன்றியும் நிறைந்த வாக்காளப் பெருமக்களாகிய உங்களை சந்தித்துக் கொள்வதில் ஆத்மார்த்தமான மகிழ்ச்சியடைகிறேன். அன்புள்ள எனது உடன்பிறப்புகளே, வாக்காளப் பெருமக்களே...
2009ஆம் ஆண்டு, மே மாதம் 18ந் திகதி பயங்கரவாதிகளிடமிருந்து இலங்கைக்கு இரண்டாவது சுதந்திரம் கிடைத்தது. நாம் பெற்ற அந்த அளப்பரிய யுத்த வெற்றி- எமது நாட்டுக்கும், எம் ஒவ்வொருவருக்கும் கிடைத்த பூரண சுதந்திரமாகும். அந்த வெற்றியில் ஒவ்வொரு முஸ்லிமும் பங்காளராயிருந்து செயற்பட்டிருக்கின்றோம். என்றுமே நாட்டின் தேசிய நலனில் முஸ்லிம்களின் வகிபாகம் ஆரோக்கியமானதாகவும், சிறப்பானதாகவும் அமைந்திருக்கிறது.
இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் காலங்களிலும் தேசத்தையும், இந்த தேசத்தின் மறுலர்ச்சிக்கும்,புத்தெழுச்சிக்கும் அன்றும் இன்றும் என்றும் அர்ப்பணிப்புடன் உழைத்துக் கொண்டிருக்கும் எமது ஆளுமைமிக்க தேசியத் தலைவர் மேன்மை தங்கிய மஹிந்த ராஜபக்ஷ அவர்களையும் பலப்படுத்தி, இந்த நாட்டை விரும்புகிற உன்னத பிரஜைகளாக முஸ்லிம்கள் அனைவரும் எமது அன்புக்குரிய சகோதர சமூகத்தாருடன் கை கோர்த்து ஒற்றுமையாய் வாழ்தல் எமது எதிர்கால சந்ததியினருக்கு நாம் விட்டுச் செல்லும் மிகச் சிறந்த முன்மாதிரியாகும் என்பதை இவ்வேளையில் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
பிற சமூகங்களுடன் இணங்கி வாழ்வதே இஸ்லாத்தின் அடிப்படை பண்பாகும்.இஸ்லாம் கூறும் வழிமுறையும் இதுவேயாகும்.பல்லின மக்கள் வாழும் இந்த நாட்டிலே சகிப்புத் தன்மை, சக வாழ்வு, புரிந்துணர்வு என்பன மிக அவசியமாகும் என்பதை நாம் முதலில் உணர வேண்டும்.
காலம் காலமாக நாம் வாழும் நாடு இது. இந்த நாடுதான் எமது பூர்வீகம். எனவே இந்த நாட்டை நாம் நேசிக்க வேண்டும். இந்த நாட்டிற்குள் மீண்டும் பிளவுகளை ஏற்படுத்த நினைப்போரையும், நாட்டிலே ஒரு ஸ்திரமற்ற ஆட்சியை நிறுவ நினைப்போரையும் முஸ்லிம்களாகிய நாம் முளையிலே கிள்ளியெறிய வேண்டும்.
எமது தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் எமது முஸ்லிம் சமூகத்திற்கும் இடையில் நிரந்தரப் பகையை உருவாக்கி, அதில் குளிர் காயவும், அரசியல் லாபம் தேடவும் எதிரணி அரசியல்வாதிகள் சூழ்ச்சி வலை பின்னி இருக்கின்றார்கள்.
எனவே,அந்த சூழ்ச்சி வலையில் முஸ்லிம்கள் வீழ்ந்து, எமது சமூகத்திற்கும் எமக்கும் பிற சமூகத்தினர் மத்தியில் அபகீர்த்தியை ஏற்படுத்தி விடக் கூடாது என்பதை இவ்வேளையில் உங்கள் எல்லோருக்கும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். முஸ்லிம்களுடன் இணக்கமாக வாழும் ஏனைய சமூகங்களுடன் சகிப்புடன் நடந்து கொள்ளுமாறு இஸ்லாம் எம்மைப் பணிக்கிறது. இந்த சகிப்புத் தன்மையின் விளைவுதான் சகவாழ்வு என இஸ்லாம் கருதுகின்றது.
ஆதலால், கடந்த கால கசப்புணர்வுகளை முதலில் நாம் களைந்தெறிய வேண்டும். ஒரு முஸ்லிம் சக முஸ்லிமுடன் மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல், உறவாடமால் இருப்பதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.
அது போன்றுதான், எமது பிரதேசத்திலே சகோதர சமூகத்தாருடன் கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்புணர்வுகள் மறக்கப்படல் வேண்டும். அவர்கள் எமது சகோதரர்கள், இஸ்லாம் எமக்கு கற்றுத் தந்த சகிப்புத் தன்மையை நாம் இவ்வேளையில் கடைப்பிடிக்க வேண்டும் சகோதரர்களே. மறப்போம் மன்னிப்போம் அதுதான் எமது சாந்தி மார்க்கம் எமக்கு போதித்த நெறி முறையாகும்.
எமது தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்த நாட்டிலே இனபாகுபாடின்றி முஸ்லிம்களுக்காய் பல்வேறு அபிவிருத்தி பணிகளையும், வேலைத்திட்டங்களையும், இன்னும் முஸ்லிம்களுக்கு பலதரப்பட்ட அற்புத சலுகைகளையும் வழங்கியிருப்பதை முஸ்லிம்கள் ஒருபோதும் மறக்க கூடாது.
எனவே இஸ்லாம் நன்றியணரவை வெளிப்படுத்தும் மார்க்கம் என்பதை எமது தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு நாம் எமது ஒருமித்த ஆதரவை,வாக்குகளை வழங்குவதன் மூலம் நிருபிக்க வேண்டும். இதுவே ஒவ்வொரு இலங்கை முஸ்லிம் குடிமகனதும் தார்மீக கடமையாகும்.
நேற்றைய தினம் எமது சகோதர்களில் ஒருவரான கௌரவ அமீர் அலி அவர்கள் ஒரு முட்டாள்தன்மான முடிவொன்றை எடுத்து முழு முஸ்லிம் சமூகத்திற்கும் அபகீர்த்தி ஏற்படும் வகையில் இந்த அரசை விட்டு பிரிந்து சென்றார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இவர் மீது பூரண நம்பிக்கை வைத்து கொடுத்த பதவியை தட்டிப் பறித்து விட்டு, அந்த நம்பிக்கையை சிதறடிக்கும் வண்ணம் இன்று அந்த எம்.பி. பதவியை ராஜினாமா கூட செய்யாமல் எதிரணிக்கு தாவி இருப்பது ஒரு முஸ்லிமை பொறுத்தவரை பாரதூரமான பாவமாகும்.
இது நயவஞகத்திற்கு ஒப்பானதாகும்.இப்படியானவர்களால் எமது முஸ்லிம் இனத்திற்கு இன்னுமின்னும் இழுக்கு மாத்திரமே ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஒரு முஸ்லிம் ஒருவரின் தேசியபட்டியல் உறுப்பினர் பதவிஎன்பதால் பரவாயில்லை. ஆனால், ஒரு சகோதர இனத்தவரின் பதவியை பறித்து இவ்வாறு செய்திருந்தால் நாட்டில் என்ன நடந்திருக்கும் என்பதை சற்று யோசித்துப் பாருங்கள் சகோதர சகோதரிகளே...
பதவியை சரியாக பயன்படுத்துவோருக்குத் பதவி அமானிதம் ஆகும். புறக்கணித்து தவறான வழியில் செல்வோருக்கு பதவி ஒரு சாபக்கேடு என்பதை இவரைப் போன்றவர்கள் உணர வேண்டும். மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முஸ்லிம்கள் மீது பூரண நம்பிக்கை கொண்டிருக்கும் ஒரு உன்னத தலைவர்.
அந்த வகையில் முஸ்லிம் சிங்கள ஒருமைப்பாடு தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் இணைத் தலைவராக என்னை நியமித்திருக்கிறார். இதனூடாக நாட்டிலே சமூகங்களுக்கிடையிலான ஒருமைப்பாடு, இன நல்லுறவு, ஐக்கியம், சகவாழ்வு போன்ற பல்வேறு விடயங்களை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் இனங்களுக்கிடையில் வன்முறைகள் மற்றும் கசப்புணர்வுகள் வருவதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள, எனவே இனவாதத்தை நாட்டில் இருந்து துரத்த பல வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.
இதுவரைகாலமும் எமது முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக சிறு சிறு பிணக்குகள், கருத்து முறுகல்கள் தோன்றி இருந்த போதிலும் பாரியதொரு எதிர்ப்பு நடவடிக்கையோ, இனச்சுத்திகரிப்போ அல்லது காழ்ப்புணர்ச்சியோ குறிப்பாக எமது முஸ்லிம் சமூகத்தின் மேல் ஏனைய சமூகத்தவர்களால் அதுவும் குறிப்பாக பௌத்த இனத்தினரால் மேற்க்கொள்ளப்பட்டதில்லை.
பல்லின சமுகங்கள் வாழும் நாட்டில் ஏற்படும் பிணக்குகளை, பிரச்சினைகளை நாம் நமது அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லுதல் ஆரோக்கியமானதல்ல. பிணக்குகளை உடனே மறந்து ஒற்றுமையாய் செயற்படுதல் காலத்தின் கட்டாயமாகும். பிரச்சினகளை நீறு பூத்த நெருப்பாக எப்போதும் பற்ற வைத்தல் சிறந்த விளைவுகளை ஏற்படுத்த மாட்டாது.
இனப்பிரச்சினையின் உச்ச கட்டமான தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் யாழ்ப்பாண குடாநாட்டில் இருந்து இரவோடிரவாக எமது முஸ்லிம் உடன்பிறப்புகள் விடுதலைப்புலிகளால் துரத்தியடிக்கப்பட்டதும் எமது சமூகத்தின் சொத்துக்கள் அனைத்தும் சூறையாடப்பட்டதும் வரலாற்றில் என்றும் மறக்கமுடியாத துர்ப்பாக்கியமான சம்பவமாகும்.
இது முஸ்லிம்கள் வரலாற்றில் கறை படிந்த பதிவாகும். அப்போது ஆட்சியில் இருந்தவர்கள் ,வேடிக்கை பார்த்தவர்கள் தான் மறுபடியும் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முனைகிறார்கள் என்பதை நாம் அவசியம் சிந்திக்க வேண்டும் உறவுகளே.
அதேநேரம் கிழக்கு மாகாணத்தில் ஏறாவூர் மற்றும் காத்தான்குடி இன்னும் சில முஸ்லிம் ஊர்களில் விடுதலைபுலிகளால் எமது முஸ்லிம் சகோதர சகோதரிகள் உயிர் மற்றும் உடைமைகள் காவு வாங்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களும் எம் மனதினில் ஆறாத காயமாக இடம்பிடித்துள்ளன. எனவே இவற்றின் மூலம் முஸ்லிம் சமூகம் படிப்பினை பெற வேண்டும்.
கடந்த காலங்களில் எமக்கு ஏற்பட்ட அநீதிகளை விட ஐ.தே.க ஆட்சியில் முஸ்லிம்கல் அனுபவித்த துன்பங்கள் துயரங்கள் சொல்லி மாளாது. அத்தனை கண்ணீர் கதைகள், சோகங்கள். 2009 க்கு பிறகு நாம் மகிழ்ச்சியாய் வாழ்கிறோம். நினைத்த நேரத்தில் யாழ்ப்பாணத்திற்கு வியாபாரம் செய்ய இங்கிருந்து போகிறோம்.
யாழ்ப்பாணத்தில் இருந்து நினைத்த நேரத்தில் இங்கு வருகிறோம். கிளிநொச்சியை பார்க்க போகிறோம். இந்த இலங்கையில் நாம் கனவிலும் நினைக்காத இடங்களை எல்லாம் ஒரே நாளில் சுற்றிப் பார்க்க வாய்ப்பு அமைத்து தந்தது யார் சகோதர சகோதரிகளே..? நாம் சற்று சிந்திக்க வேண்டும். மஹிந்த ராஜபக்ஷ என்ற உன்னத மனிதரின் ஆட்சியிலேயே இதுவெல்லாம் எமக்கு சாத்தியமானது.
எனவே, மறுபடியும் எமக்கு இருண்ட யுகம் எமக்கு வேண்டாம். கசப்புகளை மறந்து நாம் அனைவரும் ஒற்றுமையாய் வாழ வேண்டும். மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சியில் மாத்திரமே நாம் மகிழ்ச்சியாய் வாழலாம் என்பதை இங்கே சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
இலங்கைத்தீவில் வசிக்கும் ஒவ்வொரு முஸ்லிமும் சகோதர மக்களுடன் உறவைப் பேணி நடப்பதும்,ஓரணியில் ஒற்றுமையுடன் ஒன்றுபடவேண்டியதும் காலத்தின் தேவையாகும். சிந்தித்து செயல் படுவோம் சகோதரர்களே, எல்லாம் வல்ல இறைவன் எமது சமூகத்துக்கும் நாட்டு தலைவருக்கும் துணையிருப்பான்.
எனவே, முஸ்லிம்களாகிய நாம் பகைமையை ஒரு போதும் பகைமையால் வெல்ல முடியாது. பகைமையை என்றுமே நல்ல அன்பினால் தான் வெல்ல முடியும். அதனை இங்கிருக்கிற எல்லோரும் உணர்ந்து செயற்பட்டு, எதிர்வரும் 8 ஆம் திகதி எமது அன்புக்குரிய நம்பிக்கை மிக்க தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வெற்றியின் பங்காளராய் வாக்களித்து, எமது வளமான தேசத்தை மென்மேலும் வளப்படுத்துவோம்.
.jpg)
நீங்க யாரு? அழுத்கம எரியும் போது நீங்களும் உங்கட ஜனாதிபதியும் எங்க இருந்தீங்க? அழுத்தமய பத்தவச்ச ஞானசார உங்கட ஜனாதிகதிக்கு இப்ப சப்பொடடாமே? நீங்களும் எப்படி?
ReplyDeleteஉங்கட ஜனாதிபதி மீண்டும் வந்தா எதெல்லாம் பத்தும் என்று லிஸ்ட் போட்டாச்சா?
இவர் சொல்வதைப்போல் எம் நாட்டுக்குள் இன துவேசத்திற்கு பின்னணியாக செயட்பட்டவர்களையும் மேலும் எமது இனத்துக்கு அபாயமாக இருப்பவர்களையும் தேசிய சொத்தை சூறையாடி, சர்வதிகார ஆட்சிக்கு அத்திவாரம் இடுபவர்களையும் ஓரம் கட்டத்தான் வேண்டும். அல்லாஹ் இந்த மௌலானா பரம்பரைக்கு ஹிதாயத் கொடுப்பானாக!
ReplyDeleteநன்றி ஐயா மசூர் மௌலானா.
இப்படிக்கு,
எனது சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநியாயங்களை மறக்காத தேசப்பற்றுள்ள ஒரு குடிமகன்,
அப்துல் ஹலீம்