மைத்திரிபால வெற்றிபெற்றால் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இழக்கப்படும் - ஹிஸ்புல்லா
மைதிரிபால ஸ்ரீசேன வெற்றி பெற்று தொகுதி வாரியான பாராளுமன்ற தேர்தல் வந்தால் கல்குடாத் தொகுதி முஸ்லீம்கள் நூறு வீதம் ஒற்றுமைப்பட்டு வாக்களித்தாலும் ஒரு காலத்திலும் பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது என்று பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் காவத்தமுனை கிராம சேவகர் பிரிவில் உள்ள திவிநெகும பயனாளிகளுக்கு வாழ்வின் எழுச்சித்திட்டத்தில் பணம் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் தலைமையில் காவத்தமுனை அல் மினா பாலர் பாடசாலையில் இன்று (24.12.2014) இடம் பெற்ற போது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற் சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.
கல்குடாத் தொகுதியில் 68 வீதமான தமிழ் மக்களும் 32 விதமான முஸ்லீம் மக்களும் வாழ்ந்து வருகின்றனர் இவர்களில் மைதிரிபால ஸ்ரீசேன வெற்றி பெற்று அவர் கூறும் தேர்தல் முறை வந்தால் ஒட்டுமொத்தமாக முஸ்லீம்கள் ஒன்று பட்டு ஒருவருக்கு வாக்களித்தாலும் தொகுதி முறைத்தேர்தலில் உறுப்பினர் ஒருவரைப் பெற்றுக் கொள்ள முடியாது அவ்வாரான நிலையில் கல்குடாத் தொகுதி முஸ்லீம்கள் அரசியல் அனாதைகளாக இருக்க வேண்டி வரும்.
அரசாங்கம் பொதுபலசேனாவுடன் இருக்கின்ற ஒரு பிரச்சினைக்காக கல்குடாத் தொகுதி முஸ்லீம் சமுகத்தை ஒரு பிரதிநிதித்துவம் அற்ற சமுகமாக்கி நிறந்தரமாக அரசியல் பிரதிநிதித்துவம் அற்ற மக்களாக இருக்க முடியுமா என இப்பகுதி மக்களிடம் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.
இன்று பாராளுமன்றத்திலே பதினெட்டு முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர் பாராளுமன்ற தேர்தல் தொகுதிவாரியாக மாற்றப்பட்டால் நான்கு உறுப்பினர்கள் மாத்திரம்தான் வருவார்கள் என்பதில் மாற்றுக் கருத்திற்கிடமில்லை.
நாங்கள் முஸ்லீம்கள் அரசியல் அநாதைகளாக மாற்றப்பட வேண்டுமா என்ற கேள்வியை கேட்டுக் கொள்ள விரும்புகிறேன் கடந்த பாராளுமன்ற தேர்தலிலே கல்குடாத் தொகுதி மக்கள் மேலதிகமாக 1400 வாக்கினை அளித்திருந்தால் இரண்டு உறுப்பினர்களைப் பெற்றுக் கொண்டிருக்க முடியும் மூவாயிரம் வாக்கினை அளித்திருந்தால் மூன்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை மட்டக்களப்பு மாவட்டத்திலே பெற்று இருக்க முடியும் நாங்கள் ஒற்றுமைப்படாததால் வந்த வினை. அது இனி வரும் காலங்களில் சிந்தித்து அரசியல் நிலமைகள் நாட்டில் இருக்கின்ற சூழ்நிலைகளை கருத்திற் கொண்டு வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
வாழ்வின் எழுச்சி திணைக்களத்தினால் காவத்தமுனை கிராமத்தைச் சேர்ந்த வாழ்வின் எழுச்சி பயனாளிகள் அறுநூற்றி முப்பது பேருக்கு வாழ்வின் எழுச்சித் திட்டத்தில் முதற் கட்டமாக இரண்டாயிரம் ரூபா வீதம் வழங்கப்பட்டது.

This 2000Rs. is nothing but bribe!
ReplyDeleteElecterol reforms proposed under maithri government is a long term plan of JHU to reduce minoroty representation in parliament. It is true that Mahind supports BBS. It is true that Mahinda government is not good and the country needs a new good ruler. Maithri seems to be a good man. But, is it wise to rush and vote for Maithree, JHU/Champika aliance? What will be the long term effects on our community? Changing the current electorel system and abolishing executive presidency will permanently damage minority interest in the country. We need change but is Maithree with his proposed policies( many of them are JHU agendas and drafted without any minority representation even from UNP) the correct joice? An emotional decision in this matter will be extremly foolish.
ReplyDeletev dnt no MR / MY3
ReplyDeletebt v need to chng the prsnt gvrnmnt
so just gv a chnc 2 my3
Please understand that mahinda also proposed same electoral reform in his manifesto. They plan one thing but Allaah knows the best so wait and see.
ReplyDelete