Header Ads



ஹிஸ்புல்லாஹ் அவர்களே, நீங்கள் ஏன் இந்த அநியாயத்தை செய்கிறீர்கள் - சுபைர்


(ஏறாவூர் அபூ பயாஸ்)

பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசென அவர்களை  ஆதரிப்பது என்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்  தீர்மானத்துட ன் இன்று மாலை ஏறாவுருக்கு திரும்பிய கிழக்குமாகாணசபை பிரதித்தவிசாளர் அல்ஹாஜ் எம்.எஸ்,சுபைர் அவர்களுக்கு ஏறாவூர் மக்களால் கொட்டும் மழையிலும்  மகத்தான வரவேற்பு அளிக்கபட்டது . 

ஏறாவூர் மணிக்கூட்டு சந்தியிலிருந்து அவரது அலுவலகம் வரை ஊர்வலமாக அழைத்துச்செல்லப்பட்ட பிரதித் தவிசாளர்  உரையாற்றும்போது,

 நடைபெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற தீர்மானத்தை எடுப்பதற்காக எமது கட்சியானது மூன்று உயர்பீட ௯ட்டங்களை நடாத்தி இருந்தது. இரு முறை சகோதரர் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார். இறுதியாக  நடைபெற்ற உயர்பீட ௯ட்டத்திற்கு அழைக்கப்பட் டிருந்தும் பிரதி அமைச்சர்  கலந்து கொள்ளவில்லை. 

உயர் பீட உறுப்பினர்கள் கலந்துகொண்ட அமர்வில் பெரும்பான்மையான  உறுப்பினர்கள் பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசென அவர்களை ஆதரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தனர். ஜனநாயக கட்சி என்ற அடிப்படையில்அதிகப்படியான உறுப்பினர்களின் கருத்துக்கு செவிசாய்த்து தலைமையும் உயர்பீட உறுப்பினர்களும் இணைந்து பொது வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்ற தீர்மானத்துக்கு வந்தோம்.
தொடர்ந்து உரையாற்றிய சுபைர் அவர்கள்,

 பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்களே  ! நீங்கள் ஏன் இந்த அநியாயத்தை செய்கிறீர்கள். ஜனநாயக ரீதியாக செயற்படுகின்ற எங்களுக்கு உங்களது அரச அதிகாரத்தைக் கொண்டு எங்களைக் கடத்துவதற்கும், அச்சுறுத்தல் செய்வதற்கும் புலனாய்வுத்துறையினரைக்கொண்டு சதி செய்யாதீர்கள். மறைத்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் இருக்கும் போது எவ்வாறு முனாபிக் தனமாக செயல் பட்டிர்கள் என்பதனை மக்கள் அறிவர். அதனைப் போன்று நமது தலைமையும் எடுத்த தீர்மானத்துக்கு எதிராக செயற்பட்டு எங்களது கட்சியின் பிரதேச உறுப்பினர்களை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறீர்கள். பொலிசாரைக் கொண்டு பயம் காட்டுகிறீர்கள்.அவ்வாறான செயல்களில் இருந்து விடுபட்டு அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்ளுங்கள்.

எங்களது சமூகம் மிகவும் கவலையோடு இருக்கின்றார்கள்.உங்களது கபடத்தனமான் வேலைகளை விட்டுவிட்டு மீண்டும் கட்சியோடு இணைந்து இந்த சமூகத்தை காக்கும் பணியில் ஈடுபடுங்கள் .

  அன்பின் ஏறாவூர் சமூகமே, எமது தலைவர் றிசாத் பதியுதீன் அவர்கள் தனது அதிகாரமிக்க அமைச்சு பதவியை தூக்கி எறிந்துவிட்டு சமூக காவலனாக உங்கள் முன் பொதுவேட்பாளருக்கு ஆதரவளிக்க வந்துள்ளதால் நீங்களும் அந்த பயணத்தில் இணைந்து கொண்டு பொதுவேட்பாளரை வெற்றி பெறச்செய்ய உதவவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்,

1 comment:

Powered by Blogger.