கல்முனையில் மைத்திரியின் வெற்றியை, உறுதிசெய்ய கலந்துரையாடல்
(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
கல்முனையில் மக்கள் சக்தி முன்னணியின் ஏற்பாட்டில் ஜனாதிபதி தேர்தல் பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவின் வெற்றியினை மேலும் உறுதி செய்யும் வகையில் ஆதரவாளர்களுடனான கலந்துரையாடலொன்று இன்று கல்முனை மக்கள் சக்தி முன்னணியின் காரியாலயத்தில்
இடம்பெற்றது.
மக்கள் சக்தி முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.ஜி.அப்துல் றஹீம் தலைமையில் இடம்பெற்ற மேற்படி கலந்துரையாடலில் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவினால் கல்முனைத் தொகுதியின் ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைகளை கவனிப்பதற்கென நியமிக்கப்பட்ட மக்கள் சக்தி முன்னணியின் தலைவர் எச்.எம்.றூமி மஹ்மூத் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அங்கு சமூகமளித்திருந்த ஆதரவாளர்கள் மத்தியில் எதிர்வரும் தேர்தல் நடவடிக்கைகள் சம்பந்தமாக கலந்துரையாடினார்.
நாடு தழுவிய ரீதியில் வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேன அவர்களுக்கு அதிகரித்திருக்கும் ஆதரிவினை மேலும் உறுதி செய்யும் வகையிலும் கல்முனைத் தொகுதியில் மக்களை விழிப்புட்டும் கலந்துரையாடல்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

Post a Comment