கரையோர மாவட்டக் கதை பேசி காலத்தை வீணடிப்பதை விட, உருப்படியாக எதையாவது செய்யமுடியுமானால் மக்கள் சந்தோசப்பட வாய்ப்புண்டு.
-முன்னாள் பிரதி அமைச்சர் எஸ்.நிஜாமுதீன்-
கரையோர மாவட்டக் கதை பேசி காலத்தை வீணடிப்பதை விட்டு உருப்படியாக எதையாவது செய்யமுடியுமானால் மக்கள் சந்தோசப்பட வாய்ப்புண்டு.
தலைவர் அஷ்ரஃப் அவர்கள் அன்று சொன்ன விடயங்கள் இன்றும் கவனிக்கத்தக்கது. தமிழ் மக்கள் இந்திய இலங்கை ஒப்பந்தப்படி இணைந்த வட கிழக்கு மாநிலமே தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு என்பதை ஒப்புக் கொள்ளும் பட்சத்த்தில் வட கிழக்கு இணைப்பு நிரந்தரமானதாக ஒத்துக்கொள்ளும் போது கிழக்கில் 40 சத வீதத்த்துக்கும் அதிகமான முஸ்லிம்களின் அரசியல் இருப்பை பாதுகாக்க அம்பாரை மாவட்டத்த்தோடு இடையில் இணைக்கப்பட்ட பிரதேச செயலாக பிரிவுகளை உதாரணமாக விந்தனைப்பற்று பிரதேசத்தை எடுத்து விட்டு அறுபதுகளில் இருந்த அம்பாரை மாவட்டத்தோடு வட கிழக்கின் முஸ்லிம் பெரும்பான்மை பிரதேச செயலக பிரிவுகளையும் உள்ளடக்கிய அதிகார அலகுதான் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் இலட்சியமாக இருந்தது.
கிழக்கு பிரிந்த நிலையில் கிழக்கு மாகாண ஆட்சி அதிகாரத்தில் கணிசமான செல்வாக்கு செலுத்த்த முடியுமான சூழ்நிலையில் கரயோர மாவட்ட கோசம் மல்வத்தை போன்ற பிரதேசங்களிலே உள்ள எமது சமூகத்துக்கு சொந்தமான காணிகளையும் இழக்க காரணமாக அமைய சாத்தியமுள்ளதனால் இந்த வெறும் கோசம் சிலரை கிளுகிளுப்பூட்ட உதவலாம் நீண்டகால பிரச்சினைக்கு காரணமாகவும் இது அமையும். கல்முனை பிரதேச செயலக நிர்வாகமே தலை கீழாகி விட்ட நிலமையை மறந்து விட்டோம் என்று தான் கூற வேண்டியுள்ளது.

இதுதான் உண்மை.
ReplyDeleteதிரு. நிஜாமுதீன் அவர்களே, அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே...