Header Ads



றிசாத் பதியுதீன் வெளியேறியதால், எமக்கு இனிமேல் கிறிஸ்த்தவ வாக்குகள் கிடைக்கும் - பசில் ராஜபக்ஸ

றிசாத் பதியுதீன் எமது அரசாங்கத்தில் நீண்டகாலம் இணைந்து பணியாற்றிவர். திங்கட்கிழமை மாலை வரை அவர் அரசாங்கத்திலிருந்து விலகுவாரென எனக்கு தெரியாது என அமைச்ர் பசில் ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்,

இதுதொடர்பில் பசில் ராஜபக்ஸ மேலும் தெரிவித்துள்ளதாவது,

கடந்த சனக்கிழமை, 20 ஆம் திகதி றிசாத்துடன் நீண்டநேரம், தனிப்பட்டமுறையில், அவருடன் பேசியபோது, சில நிகழ்வுகள் தொடர்பில் அவரது கவலைகளை வெளியிட்டிருந்தார். எனினும் இப்படியொரு முடிவு எடுக்கப்போவதாக கூறியிருக்கவில்லை.

தனிப்ட்ட ரீதியில் அவரால் இந்த முடீவு எடுக்கபட்டிருக்கிறதே தவிர, இதில் அரசியல் காரணங்கள் எதுவும் கிடையாது. சில ஊடகவியலாளர்கள் தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினைகள்தான் இதற்கு காரணம் கூறப்படுகிறது. அத்துடன் அந்த ஊடகவிலாளர் அரசியல்வாதியாக, அதாவது பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

நாம் றிசாத் பதியுதீனை தேர்தல் பிரதிநிதியாக நியமித்திருந்தோம். எந்தப் பிரச்சனையும் வராது என்றே அவர் அதை பொறுப்பேற்றிருந்தார். 

றிசாத் அரசாங்கத்திலிருந்து எமக்கு சாதகமாக அமையக்கூடும். றிசாத்தின் காரணமாகவே எமக்கு இவ்வாளவு காலமும் கிடைக்காமல் போயிருந்த மன்னார் கத்தோலிக்க மற்றும் தமிழ் மீனவ மக்கள் எமக்கு ஆதரவளித்து எம்முதுடன் இணைந்தகொள்க்கூடிய வாயப்பு இருக்கிறது.

எவ்வாறு இருப்பினும் ஜனாதிபதியும், எமது அரசாங்கமும் முஸ்லிம் மக்களை பாதுகாக்க தொடர்ந்தும் செயற்படுவோம். முஸ்லிம்கள் எமக்கு தொடர்ந்தும் ஆதரவளித்து செயற்பட வேண்டும்.

இதேநேரம் இச்சம்பவத்தை விடுத்துப் பார்த்தால் முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்தும் அரசாங்கத்துடன் இருக்கும் என்று நம்புவதாகவும் அமைச்சர் பசில் ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. So, your victory is confirmed isn't it?
    Let's wait and see!

    ReplyDelete
  2. இவ்வளவு காலமும் பொது பல சேனாவை வைத்து பாதுகாதிற்றயல் இனிமேலும் பாதுகாபயல் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.

    ReplyDelete

Powered by Blogger.