முஸ்லிம் காங்கிரஸூடன் எவ்விதமான ஒப்பந்தங்களையும் நான் செய்யவில்லை - மைத்திரி
தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடனோ, முஸ்லிம் காங்கிரஸூடனோ எவ்விதமான ஒப்பந்தத்தையும் நான் செய்துகொள்ளவில்லை என்று பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் கிட்டு மைதானத்தில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற ஜனாதிபதி தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
அரசாங்கத்தினால் எனக்கெதிராக சேறுபூசும் பிரசாரங்களே முன்னெடுக்கப்படுகின்றன. நான்; யாருடனும் இரகசிய ஒப்பந்தங்களை செய்துகொள்ளவில்லை. மக்களின் நலனை கருத்தில் கொண்டவர்களே என்னுடன் இணைந்துகொண்டனர். விசேடமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸூடன் எவ்விதமான ஒப்பந்தங்களையும் நான் செய்துகொள்ளவில்லை என்றார்.

இனி முஸ்லிம் காங்கிரசை இரண்டு பிரதான கட்சிகளும் நம்ப மாட்டார்கள் .
ReplyDeleteதமிழ் முஸ்லிம் மக்கள் பட்ட கஷ்டம் இந்த உலகம் அறிந்தது அதன் காரணமாகத்தான் எந்த விதமான நிபந்தனையும் இல்லாமல் தமிழ் தேசிய கூட்டணியும் முஸ்லிம் காங்கிரசும் மைத்திரிபால சிரிசெனாவின் கூட்டணிக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளது இதனை போருக்க முடியாமல் விமல் வீரவன்சையும் போதுபல சேனாவும் ஊளைவிட்டு திரிகிறார்கள்
ReplyDelete