Header Ads



கணித பாடத்தில் சித்தியடையாதவர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டி - பந்துல குணவர்தன

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் கணித பாடத்தில் சித்தியடையாதவர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு கணித பாடத்தில் சித்தியெய்தாத பலர் அரசியலில் முக்கிய பதவிகளை வகித்து வருகின்றனர்.

கணித பாடத்தில் சித்தியடையாத எத்தனை பேர் நாட்டை வழிநடத்த போட்டியிடுகின்றார்கள் என்பதனை நாம் ஆராய வேண்டும்.

பொலனறுவையில் பிறந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மைத்திரிபால சிறிசேன, தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கணிதத்தில் தோல்வியடைந்தவர்களுக்கு சலுகைகள் வழங்கியிருக்க வேண்டும்.

எனினும், கணித பாடத்தில் சித்தியடையாதவர்கள் பற்றி மைத்திரிபால சிறிசேன எதனையும் குறிப்பிடவில்லை.

மைத்திரியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கல்வித்துறையை தனியார் மயப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை தெளிவாக புலப்படுகின்றது என பந்துல குணவர்தன குற்றம் சுமத்தியுள்ளார்.

2 comments:

  1. Bandula is getting mad. What about Cabinet Minister, Weeluwansa's theory of 2/2=0?????????????????

    ReplyDelete
  2. வெறும் 7000 ரூபாயில் ஒருமாதத்திற்கு வாழ்க்கை நடத்தலாம் என்று கூறிய கூ முட்டை நீ கல்வி அமைச்சராய் இருக்கலாம் என்றால், நீதியே இல்லாத நாட்டில் நீதியமைச்சர் இருக்கலாம் என்றால். ,, அவர்கள் ஏன் இருக்கக் கூடாது?

    ReplyDelete

Powered by Blogger.