Header Ads



ஞானசாரர் இன்று நடாத்திய ஊடகவிலாளர் மாநாட்டிலிருந்து..!

தமிழ் தேசிய கூட்டமைப்பு, கட்டாயமாக பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கே ஆதரவளிக்கும் என ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் அந்த கட்சி வெளிப்படுத்தியிருந்ததாக பொதுபல சேனா இயக்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று 30-12-2014 இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அந்த இயக்கத்தின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இந்த கருத்தை வெளியிட்டார்.

பொதுவேட்பாளருக்கான ஆதரவை தாம் தேர்தல் தினம் நெருங்கும் தருணத்திலேயே அறிவிப்போம் என்றும் அவர்கள் கூறியிருந்தார்கள்.

ஆனால் அதற்கு முன்னதாக அவர்கள் வடக்கில் பல பிரதேசங்களில் மைத்திரி வரணய என்ற பெயரில் 5 பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரசார நடவடிக்கைகளுக்கு மில்லியன் கணக்கான நிதி தூதுவராலயங்கள் ஊடாக வழங்கப்பட்டிருந்தமையை நாம் அறிவோம்.

அமெரிக்க தூதுவர உள்ளிட்ட பல தூதரகங்கள் தமிழ் கூட்டமைப்புக்கு அறிவித்தல் அடிப்படையல் கட்டுப்பாடுகளுடன் இந்த நிதியை வழங்கியிருந்தன.

குறிப்பாக வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகளை பொது எதிரணிக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த தூதுரகங்கள் பணித்திருந்ததாக பொது பல சேனா இயக்கத்தின் பொது செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பொலன்னறுவை பிரதேசத்தில் அசாதாரண காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை எடுத்துச் சென்ற தமது பௌத்த பிக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் குறிப்பிட்டார்.

இதில் ஒரு பௌத்த பிக்கு பலத்த காயமடைந்துள்ளார். நகரத்தில் துண்டு பிரசுரங்களை விநியோகிக்க சென்ற போதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதக குறிப்பிட்டார்

6 comments:

  1. இவர வைத்துக்கொண்டுதான் அரசாங்கம் இன்னும் நாடகம் ஆடிக்கொண்டு இருக்கிறது கொழும்பை அண்மித்துள்ள எத்தனையோ மாவட்டம் மழையிலும் வள்ளத்திலும் பாதிக்கப்பட்டு இருக்கும்போது இவர் எதுக்காக பொலன்னறுவைக்கு உதவி செய்யப்போனது அங்குள்ள மக்களுக்கு அங்குள்ள அரிசி ஆலைமுதலாளிமார்கள் உதவி புரிவார்கள் இவர் ஏன் அங்கு போகவேண்டும்? இது அரசாங்கத்தின் திட்டமிட்ட சதி போதுபல சேனா மற்றும் போதுபல சேனாவை உருவாக்கியவர்கள் அனைவருக்கும் இன்னும் குறிப்பிட்ட நாட்களே உள்ளது

    ReplyDelete
  2. யா அல்லாஹ்! எமக்கும், நாம் பின்பற்றும் இஸ்லாத்துக்கும் மட்டுமின்றி உனக்கெதிராக உன் வார்த்தைகள் அடங்கிய குர்ஆனுக்கெதிராக குறைத்துக் கொண்டே இருந்த இந்த நாயை எட்ரஸ் இல்லாமல் அழித்தேவிடுவாயாக. இவனையும் இவன் சார்ந்தவர்களையும் ஒழித்துக் கட்டுவாயாக. எமக்கு நிம்மதியாக வாழவும், எமது மார்க்க விடயங்களில் விரலடிக்காமலும் இருக்கும் நல்ல ஆட்சியாளனை எமக்கு வழங்குவாயாக. இஸ்லாத்துக்கெதிராக மேடை போட்டுக் கத்தித் தொலைத்த முஸ்லிம்களின் கடைகளை எரித்து பொருளாதாரத்தில் மோசடி செய்த, முஸ்லிம் வீடுகளை எரித்து முஸ்லிம் இளைஞர்களைக் கொன்ற இந்தக் கயவனுக்கு எம் கண்ணால் பார்க்க பௌத்த மக்களாலே தண்டிக்கச் செய்வாயாக.

    ReplyDelete
  3. alhamthullillah Allahuakbar

    ReplyDelete
  4. Inside beauty will display outside, see his face, look like criminal, killer and his talk filled with poison, Mr MR has chosen right person for the job.
    now he becomes a enemy of good buddies people.

    ReplyDelete

Powered by Blogger.