Header Ads



நான் யாருக்கும் தற்போது அப்பம் சாப்பிட கொடுப்பதில்லை, தேநீர் மட்டுமே வழங்குகிறேன் - மஹிந்த

ஐக்கிய தேசியக் கட்சி அறிவில்லாத ஒருவரை ( இடியட்) அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தெரிவு செய்துள்ளது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொடையில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது இவர் இதனைக் குறிப்பிட்டார்.

2010 ஆம் ஆண்டு சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்கியமையை போன்றே இந்த தடவையும் ஐக்கிய தேசியக் கட்சி செயற்படுகிறது.

தேர்தல்கள் வரும்போது ஐக்கிய தேசியக் கட்சிக்கு நடுக்கம் ஏற்படுகிறது. இதனையடுத்து தமது பெயரை பயன்படுத்தி அறிவில்லாதவர்களை பிடித்து கொள்கிறது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

தம்முடன் முதல் நாள் இரவு அப்பம் சாப்பிட்ட மைத்திரிபால அடுத்த நாள், எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டார்.

காட்டிக்கொடுக்கும் இவ்வாறானவர்களிடம் நாட்டை எவ்வாறு கையளிப்பது என்று கேள்வி எழுப்பிய ஜனாதிபதி தற்போது தாம் யாருக்கும் அப்பம் சாப்பிட கொடுப்பதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

அப்பத்துக்கு பதில் தேனீரை மட்டுமே வழங்குவதாக தெரிவித்த அவர், தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் தம்முடன் தேனீர் அருந்துவற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு உரிய தலைமைத்துவம் இல்லை என்று தெரிவித்த ஜனாதிபதி, ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சி தலைவர் பதவியை தக்க வைத்துக் கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

2 comments:

  1. மனத்தால் சொல்லவில்லை உள்ளூர பயம் பிடித்துவிட்டது இனி அப்பமும் வேண்டாம் தேநீரும் வேண்டாம்

    ReplyDelete
  2. அறிவில்லாத ஒருவரை ஒட்டிப் பிறந்தவரைப் போல உங்கள் பக்கத்திலேயே செயலாளராக வைத்துக் கொண்டிருந்த உங்கள் அறிவை என்னென்று சொல்வது ராஜாவே. ஹிஹ்ஹிஹ்ஹீ ஹீ. நீங்கள் ஆப்பிழுத்த குரங்கு ராஜாவே. எதிரணியில் ரணிலோ, சஜித், கரு யார் வந்தாலும் சமாளிக்கலாம் என்று நினைத்தீர்களே. இப்பொழுது உங்கள் தொடை நடுங்கிறதோ. ஹிஹ்ஹிஹ்ஹீ ஹீ.

    ReplyDelete

Powered by Blogger.