Header Ads



முஸ்லிம்களின் மன உணர்வையும், விருப்பத்தையும் கருத்திற்கொண்டே மைத்திரிக்கு ஆதரவளிக்கிறோம்

(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)

சொகுசு வாழ்க்கைக்காக குத்துக்கரணம் போடும் -பிரயமைச்சர்; ஹிஸ்புல்லா
ஒட்டுமொத்த முஸ்லிம்களின் மன உணர்வுகளை மதித்தும் அவர்களின் அரசியல் அபிலாஷைகளையும் விருப்பத்தையும் கருத்திற்கொண்டுமே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அரசிலிருந்து வெளியேறி மைத்திரிக்கு ஆதரவளிப்பதாக அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலரும் கிழக்கு மாகாண பிரதி தவிசாளருமான எம்.எஸ்.சுபைர் தெரிவித்துள்ளார்.

பதவிக்காகவும் அற்ப சொற்ப சலூகைகளுக்காகவும் சோரம்போனவர்களே தொடர்ந்தும் மஹிந்த அரசுடன் ஒட்டிக்கொண்டிருக்கின்றனர்.

அகில் இலங்கை மக்கள் காங்கிரஸையும் அதன் தலைவரையும் அட்டைபோல உறிஞ்சி, அத்தனை சுகபோகங்களையும் அனுபவித்தவர்கள் அரசியலில் எப்போதும் நேர்மையானவர்களாக இருந்ததில்லை.

நேர்மையான அரசியல் பற்றி தம்பட்டமடிக்கும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் கடந்த கால அரசியல் வரலாறு மக்கள் அறியாத ஒன்றல்ல. மர்ஹூம் அஷ்ரபின் பாசறையில் வளர்ந்ததாக மேடைகளில் பீற்றித்திரியும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா, அந்த மாமனிதருக்கே துரோகம் இழைத்தவர். றிஷாட்டும் அமீரலியும் துரோகம் செய்துவிட்டனரென தற்;போது கொக்கரிக்கும் ஹிஸ்புல்லா, முஸ்லிம் சமூகத்தின் விடிவெள்ளி மர்ஹூம் அஷ்ரபின் முன்னிலையில் செய்த கனவான் ஒப்பந்தத்தை அதாவது, பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காலத்தில் முதல் பாதிக்காலங்கள், தனக்கும் பிந்திய பாதிக்காலங்கள் மர்ஹூம் மொஹிதீன் அப்துல் காதருக்கும் என்ற கனவான் ஒப்பந்தத்தை மீறி மாதலைவர் அஷ்ரபின் முகத்தில் கரிபூசியவர்.

காலத்துக்கு காலம் பதவிக்காகவும் சொகுசு வாழ்க்கைக்காகவும் கூடுவிட்டுக் கூடு பாயும் ஹிஸ்புல்லா இப்போது மார்தட்டிப் பேசுவதுதான் விந்தையானது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலேதான் இன்னும் இருப்பதாகக் கூறும் அந்தக் கனவான் மர்ஹூம் அஷ்ரபின் மறைவின் பின்னர் ரவூப் ஹக்கீம் தலைமைப் பதவியை ஏற்றபோது காழ்ப்புணர்ச்சியினால் வேறு சிலருடன் இணைந்து தாங்கள் தான் உண்மையான முஸ்லிம் காங்கிரஸ் என பிரகடனப்படுத்தி மூககுடைபட்டவர். ஆதன் பின்னர் பொதுஜன ஐக்கிய முன்னணியிலும் பின்னர் முஸ்லிம் காங்கிரஸிலும் மாறி மாறிக் கட்சிதாவி சொகுசான பதவிகளை வகித்துவிட்டு 2008 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் கனவில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸூடன் இணைந்தவர்தான் இந்த ஹிஸ்புல்லா. இந்தக் கட்சியில் அவர் இருந்த காலத்தில் எப்போதாவது முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினை பற்றியோ வடக்கு, கிழக்கு அகதிகளின் இன்னல் பற்றியோ, பொதுபல சேனாவின் அடாவடித்;தனங்கள் பற்றியோ வாய் திறந்துள்ளாரா?

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினாலும், கோட்டா, பசில் ராஜபக்ஷக்களின் கோபக்கரைக்கு ஆளாகிவிடுவோமோ என்ற பீதியே அதற்குக் காரணம். அவர் தனது அரசியல் இருப்பைப் பாதுகாப்பதற்காக எதையும் செய்வார் என்பது கடந்த கால வரலாறு. அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இன்னும் இருப்பதாக கூறும் அவர் கட்சி கூடி தீர்க்கமான தீர்மானம் எடுப்பதற்குள்ளே ஏன் காத்தான்குடியில் மஹிந்தவுக்கு ஆதரவளித்து கட்டவுட்களை கட்டினார்.
கடந்த காலங்களில் அவர் மேற்கொண்ட அரசியல் குத்துக்கரணங்கள் சமூகம் அறியாத ஒன்றல்ல. அதேபோன்று கட்சியின் உப தலைவராகவிருந்த சட்டத்தரணி சஹீட் தனது சொந்தக் கிராமத்தியேலே செல்வாக்கில்லாதவர். றிஷாட்டுடன் இணைந்த பின்னர்தான் அவர் பல்வேறு பதவிகளை பெற்றுக்கொண்டார். அத்துடன் கட்சியில் இருந்த காலத்தில்கூட தலைவர் றிஷாட்டின் அரசியல் எதிரிகளுடன் கூட்டு வைத்து தனது காரியங்களைச் சாதித்தவர். கட்சியின் செல்வாக்கினால் றிஷாட் பெற்றுக்கொடுத்த பதிவியைத் தக்கவைப்பதற்காக தொடர்ந்தும் அரசுடன் ஒட்டியிருக்கின்றார்.
வேளிநாட்டு ராஜதந்திரி பதவி ஒன்றை மையமாக வைத்தே அவர் அரசியல் காய்களை நகர்த்தியுள்ளபோதும்  அவரது கனவு ஒருபோதும் பலிக்கப்போவதில்லை.

அதேபோன்று மேல் மாகாண சபைத் தேர்தலில் மயில் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினரின் அரசியல் சரித்திரம் நாம் தெரியாததல்ல. கொழும்பில் சில நூறு ஆதரவாளர்களைக் கொண்டுள்ள பாயிஸ் துஆ கட்சியில் இருக்கும்போது மாநகர சபை உறுப்பினர் ரோயின் முதுகில் சவாரி செய்துவிட்டு மாகாண சபை உறுப்பினராகி பின்னர் அவரை வளர்த்தெடுத்த துஆ கட்சிக்கு துரோகம் இழைத்துவிட்டு மஹிந்தவுடன் ஒட்டிக்கொண்டவர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து தேர்தலில் போட்டியிடாவிட்டிருந்தால் அவரது அரசியல் சூனியமாகியிருக்கும். அவ்வாறானவர்கள் இன்று ஊடகங்களில் பெரிதாக தம்மை விளம்பரப்படுத்திக்கொண்டு துரோகம், காட்டிக்கொடுப்பு என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவது கேவலமானது என கிழக்கு மாகாண பிரதி தவிசாளர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.