மஹிந்த ராஜபக்ஷவுக்கே முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்கும் - அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க
ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே ஆதரவு வழங்கும் என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாவலப்பிட்டியில் இன்று 14-12-2014 நடைபெற்ற பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு ஜனாதிபதிக்கே. ஜாதிக ஹெல உறுமயவை சேர்ந்த மூன்று பேர் அரசாங்கத்தில் இருந்து வெளியேறினர். ஒருவர் திரும்பி வந்தார்.
ஜே.வி.பி ஓரமாக இருந்து ஆதரவு வழங்கி வருகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை முடிவு எடுக்கவில்லை.
இதனால், இம்முறையும் எதிர்க்கட்சிகள் 25 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவும் எனவும் எஸ்.பி. திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்கலாம், வழங்காமல் இருக்கலாம். ஆனால் காட்டு மிறாண்டித் தனமாக இஸ்லாத்தையும், முஸ்லிம்கள் மதிக்கும் குர்ஆனையும், பள்ளிவாசல்களையும் அவமதித்து அட்டூழியங்கள் புரிந்த பொது பல சேனாவுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட கூறாமல் கண்டபடி நடக்க விட்ட மஹிந்தவுக்கு எந்த மனம்கொண்டு முஸ்லிம்கள் வாக்குப் போட முடியும்? உதாரணமாக அமைச்சர் பௌஸி முஸ்லிம்கள் தொழுவதற்கென பெரியாஸ்பத்திரியில் திறந்து வைத்த தொழுகை அறைக்கு என்ன நடந்தது? என்று பௌஸிக்குத் தெரியாதா? வேடிக்கை.
ReplyDeleteஇன்று முஸ்லிம் அமைச்சர்கள் தான் அரசாங்கத்து சார்பாக வாக்குப் போடுவார்கள். முஸ்லிம்கள் ஒருபோதும் வாக்குப் போடமாட்டார்கள். அப்படி வாக்குப் போடும் எந்த முஸ்லிமும் பொதுபல சேனாவுக்கு ஆதரவாக நாமும் இருக்கின்றோம் எனக் கூறுவதற்கு நிகரே. மஹிந்த ஜனாதிபதியானால் பொதுபல சேனா வின் அட்டகாசங்களை பன்மடங்கு எதிர் பாருங்கள் அன்பு முஸ்லிம்களே. ஒவ்வொரு அட்டகாசமும் நடந்து முடிய ஒவ்வொரு முஸ்லிம் அமைச்சர்களும் சொகுசு வாகனங்களில் பாதுகாப்புடன் வந்து உங்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு செல்வதை எதிர்பாருங்கள். இதைத் தவிர அவர்கள் ஒரு மயிரையும் பிடுங்கப் போவதில்லை.
ReplyDeleteHon Minister, we everyone know that you are not a racist, you are good with Muslims and minorities. You contest in the presidential election Muslims would surely consider
ReplyDelete