Header Ads



அப்பம் சாப்பிட்டால் எதிரணிக்கு, கோப்பி குடித்தால் அரசாங்கத்திற்கு - அமைச்சர் ரெஜினோல்ட் குரே

நாட்டின் அரசியல் மேடைகளில் தற்போது அப்பம் மற்றும் கோப்பி என்பன பிரதான தொனிப்பொருளாக மாறியுள்ளது என அமைச்சர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.

நாவலப்பிட்டியில் இன்று நடைபெற்று வரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

அப்பம் மற்றும் கோப்பி பற்றி பல்வேறு கதைகள் பேசப்படுகின்றன. அப்பம் சாப்பிட்டால் ஒன்று. கோப்பி குடித்தால் ஒன்று.

அப்பம் சாப்பிட்டால் எதிரணிக்கு. கோப்பி குடித்தால் அரசாங்கத்திற்கு. அப்பத்திற்கு தாய்ச்சி மறந்து போகும். அது போல மைத்திரிபால, ஜனாதிபதியை மறந்து போனார் என ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.