கழியோடை ஆறு உடைப்பெடுத்து, நெல்வயல்கள் பாதிப்பு, தென்கிழக்கு பல்கலைக்கழகம் வெள்ளத்தில் மூழ்கியது

-மு.இ.உமர் அலி-
நிந்தவூரையும் ஒலுவிலையும் பிரிப்பது கழியோடை ஆறு , சேனநாயக்கா சமுத்திரத்தின் வலது கரை வாய்க்காலான கல் ஓயா ஆறு கிழக்காக நீண்டுவந்து கடலில் சங்கமாமாகின்றது.இந்த ஆற்றின் பாசனம் மூலம் பல்லாயிரக்கணக்கான நெற்காணிகள் செய்கை பண்ணப்படுகின்றன,
கடந்த சில நாட்களாக நாடெங்கிலும் மிக அளவிலாக மழை பெய்து வருகின்றது,அம்பாறை மாவட்டத்திலும் இம்மழை பெய்கின்றமை நாமறிந்த விடையமே ,
கடந்த முப்பத்தாறு மணிகளாக தொடர்ந்து பெய்துவந்த மழை நீரின் சேர்க்கையினால் கழியோடை ஆறு பொங்கி வழிகின்றது,ஆற்றின் இருமருங்கிலும் வெள்ளநீர் கரைபுரண்டோடுகின்றது.ஆத்தியடிக்கட்டு எனும் இடத்துக்கு சற்று மேற்புறமாக ஆற்றின் வடக்குப்பக்கமாக ஒரு பெரும் வெடிப்பு ஏற்பட்டதனால் ஆற்றுவெள்ளம் நிந்தவூர் கமநலசேவை நிலையத்திற்குட்பட்ட வயற்காணிகளினூடாக பாய்ந்தோடுகின்றது.இதனால் கிட்டத்தட்ட நூற்றைம்பது ஏக்கர் வயல்கள் முற்றாக சேதமடைந்துள்ளதாக குறிப்பிட்ட வயல்களிற்கான வட்டவிதானைகள் குறிப்பிடுகின்றனர். ஒரே வெள்ளக்காடாக வயல்கள் தெரிகின்றன.
கயற்றையடி ,செங்கப்படை மேற்கு ,செங்கப்படை தெற்கு,மாட்டுப்பளை தெற்கு போன்ற நான்கு விவசாயக்கண்டங்களிலுமுள்ள சுமார் 1500 ஏக்கர் நெற்காணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. என்று பெரும்பாக உத்தியோகத்தர் ஆதில் ஹார்லிக் அவர்களும், வட்டவிதானை M சம்சுதீன் அவர்களும் கருத்துத் தெரிவித்துள்ளார்கள். மேலும் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் கதிர்ப்பருவத்தில் உள்ள நெற்பயிர்கள் இந்த வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருப்பதால் மகாபோக விவசாயிகள் விவசாயிகள் பாரிய நஷ்டத்தையே எதிர்நோக்க வேண்டி வரும் என்றும் கூறினார்கள்.
ஆற்றுவெள்ளம் இப்போது உடைப்பெடுத்திருக்கும் இடத்திற்கு எதிர்த்திசையில் தெற்குப்பக்கமாக 2011 ஆம் ஆண்டு பெய்த பெரும் மழையில் உடைப்பெடுத்து ஒலுவில் பிரதேச நெற்காணிகள் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



Post a Comment