Header Ads



ஜனாதிபதி தேர்தல் ''ஸ்பெசல் ரிப்போர்ட்''

(நஜீப் பின் கபூர்)

2015 ல் நடைபெறுகின்ற ஜனாதிபதித் தேர்தலில் தன்னுடன் முடியுமானால் நேரடித் தொலைக்காட்சி விவாதமொன்றிற்கு வருமாறு பொது வேட்பாளர் மைத்திரி அதிரடியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பகிரங்க அழைப்பைக் கடந்த சில தினங்களுக்கு முன்னர் விடுத்திருந்தார். ஆனால் இது விடயத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்னும் இது விவகாரத்தில் நேரடியாகப்பதில் சொல்லவில்லை. இது தொடர்பாக அமைச்சர் கெஹெல்லிய ரம்புக்எலவிடம் கேட்ட போது இது விடயத்தில் ஜனாதிபதியே முடி செய்வார் என்று அவர் பதில் கொடுத்தார். 

இன்னும் தேர்தலுக்குப் 10 நாட்களே எஞ்சி இருக்கின்ற இந்த நேரத்தில் மஹிந்த - மைத்திரி விவாதம் நடைமுறைச் சாத்தியமாற்றது என்றுதான் கூற வேண்டும்.ஏனெனில் இப்படி ஒரு விவாதத்தை இலங்கை அரசியல் வரலாற்றில் ஏற்பாடு செய்கின்ற போது நிறையவே தொழிநுட்பப் பிரச்சனைகளும் அரசியல் நெருக்கடிகளும் ஏற்பட இடமிருப்பதால் விவாதம் நடைபெறுவது சாத்தியமில்லாத விடயம் என்றுதான் கருத வேண்டி இருக்கின்றது.

தலைவரின் நடவடிக்கைகளில்மு.கா.செயலளர் விரக்தியில்

மு.கா. தோன்றிய காலத்திலிருந்து மிகப் பெரிய அரசியல் நெருக்கடியை அது இன்று எதிர் நோக்கி இருக்கின்றது. 2015 தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற விடயத்தில் கட்சிக்குல் மிகப் பெரிய நெருக்கடி நிலை. எனவே யாரை ஆதிரிப்பது என்பதனை  இன்று சொல்லுகின்றோம் நாளை சொல்லுகின்றோம் என்று காலத்தைக்கடத்திக் கொண்டிருக்கின்ற மு.கா. தலைமை ஜனவாரி9ம்திகதிதான் எமது முடிவை அறிவிப்போம் என்று குறிப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. 

தபால் வாக்களிப்பு நடைபெற்ற போது மு.கா. தலைவர் மனச் சாட்சிப்படி வாக்களிக்குமாறு வாக்காளர்களிடத்தில் கேட்டிருந்தார். நாம் அறிந்த மட்டில் ஒரு அரசியல் கட்சி மக்களை மனட்சாட்சி அடிப்படையில் வாக்களிக்குமாறு கேட்டிருப்பது இது முதல் தடiவாயக இருக்கும் என்று கருத வேண்டி இருக்கின்றது.எமக்குக் கிடைத்த தகவல்களின் படி  தலைவருக்கும்  செயலாளருக்குமிடையேயாரை ஆதரிப்பது என்ற  விடயத்தில் முறுகல் நிலை என்று தகவல்.பிந்திய தகவலின் படி மு.கா.மைத்திரி பாக்கம்.

மைத்திரி தேர்தல் விஞ்ஞாபனம் ஆளும் தரப்பில் முறன்பாடுகள்!

அண்மையில் பொது வேட்பாளர் மைத்திரி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைத்தார். இது பற்றிக் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மைத்திரி விஞ்ஞாபனம் தனது வரவு செலவுத் திட்டத்தில் சொல்லப்பட்ட விடயம் என்றும். மைத்திரி தேர்தல் விஞ்ஞாபனத்தின் உண்மையான பதிப்புரிமைக்காரன் நான்தான் என்றும் அதனைக் கிண்டல் பண்ணி பொதுக் கூட்டத்தில் அன்றைய தினமே பேசி இருந்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. 

இதிலுள்ள வேடிக்கை என்னவென்றால் அதே தினம் சுதந்திரக் கட்சியின் செயலாளர் மஹிந்த பிரியதர்சன யாப்பா பத்தரிகையாளர் மாநாடொன்றை நடாத்தி மைத்திரியின் தேர்தல் விஞ்ஞாபனம் நடைமுறைச்சாத்தியமில்லாதது. மக்களை ஏமாற்றுகின்ற விடயங்கள்தான் அதில் சொல்லப்பட்டிருக்கின்றது என்று குறிப்பிட்டிருந்தார். எனவே ஆளும் தரப்பு மைத்திரி தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பாக தனக்குள்லேயே முறன்பாடான கருத்தைக் கொண்டிருக்கின்றது என்று எண்ணத்தோன்றுகின்றது.

ஜனாதிபதிக்கு 7000 பேர் மைத்திரிக்கு வெறும்7பேர்

இந்தத் தேர்தல் முற்றிலும் நடுநிலமையற்றது, சட்டத்துக்கு விரோதமானது என்று தனது கடுமையான விமர்சனத்தை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார் நீதியான சமுதாயத்திற்கான அமைப்பை முன்னெடுத்துச் செல்கின்ற மாதுலுவாவே சோபித் தேரர். அவர் போகின்ற இடங்களில் எல்லாம் சட்டவிரோத தேர்தல் பிரச்சாரங்களைப் பொது மக்கள்பார்க்க முடிகின்றது. அரச ஊடகங்கள் அனைத்தும் ஒருவரின் புகழ் பாடிக் கொண்டிருக்கின்றது.

தேர்தல் ஆணையாளர் என்னசெய்வது என்று புரியாமல் தவிக்கின்றார். ஆளும் தரப்பு வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்  பாதுகாப்புக்கு 7000 படைவீரர்கள் பொது வேட்பாளர் மைத்திரியின் பாதுகாப்புக்கு வெறும் 7பேர் மட்டுமே! இது என்ன வேடிக்கை?என்ன நியாயம்? என்றுமாதுலுவாவே சோபித் தேரர் ஊடகங்கள் முன் கேள்வி எழுப்புகின்றார்.

கணனி ஜில்மாட் கதையும் மறுப்பும்!

கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் நான் போட்டியிட்டபோது நான் முன்னணியில் இருந்தேன் பின்னர் கம்பியூட்டர் ஜில்மார்ட் போட்டு என்னைப் பின்னுக்குத் தள்ளிவிட்டார்கள். எனவே அது போன்று இம்முறையும் நடக்கலாம் என்று சர்ச்சைக்குரிய பிரதி அமைச்சர்முதுஹெட்டி தெரிவித்தார். இது பற்றி சுதந்திரக் கட்சிச் செயலாளரிடம் கேட்ட போது அப்படி ஒன்றும் இந்தத் தேர்தலில் நடைபெற மாட்டாது- நடைபெறவும் முடியாது என்று அவர் குறிப்பிட்டதுடன் குறிப்பிட்ட அமைச்சரின் கூற்றுப் பொறுப்பற்றது என்றும் அவர் தனது கண்டனத்தை அங்கு தெரிவித்தார்.

தபால் வாக்களிப்பில்ஊழியர்கள் ஆர்வம்!

இந்த முறை நடைபெற்ற தபால் மூல வாக்கு பொதுவாக் அமைதியாக நடந்தேறி இருக்கின்றது என்றுதான் கூற வேண்டும். எதிரணிகள் இது விடயத்தில் எதுவித பாரதூரமான குற்றச்சாட்டுக்களையும்; முன்வைக் வில்லை. மீத்தொட்டமுல்ல, மற்றும் நாரஹென்பிட்டிய பஸ் டிப்போக்களின் வாக்களிப்பு நடந்த போது  பலத்காரம் செய்ய சிலர் முற்பட்டதனால் எற்பட்ட நெருக்கடிகளை தேர்தல் திணைக்கள அதிகாரிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அங்கு அமைதியான தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்திருக்கின்றார்கள். அதிகளவானவர்கள் உற்சாகமாக வாக்களிப்பில் கலந்து கொண்டிருக்கின்றார்கள். தபால் மூல வாக்காளர் எண்ணிக்கை 541831பேர்.

பிடிவிராந்து அரசியல்வாதி மேடையில் இசை மழை!

காலியில் பொது வோட்பாளர் மைத்திரியின் கூட்டத்திற்கு போடப்பட்டிருந்த மேடையைத்தீயிட்டுக் கொழுத்திய விவகாரத்துடன் தொடர்பாக பிரதி அமைச்சர் முதுஹெட்டி மீதும் குற்றச்சாட்டுக்கள் எழுந்திருக்கின்ற நிலையில். அது தொடர்பாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர்களை பொலிஸ் நிலையத்திலிருந்து பலாத்காரமாக வெளியே எடுத்து வந்த விடயத்தில் அந்தப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கடமையைத் தவறவிட்டார் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குற்றம் சாட்டி அவர் முதுகெழும்பில்லாதவர் என்று விமர்சித்தார். 

அரசியல்வாதிகளின் நெருக்குதல்,பொலிஸ்திணைக்களத்தின் விமர்சனங்கள் என்பவற்றால் மனமுடைந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனது பதவியை துறந்தார்.இது ஒரு புறமிருக்க இந்த விவகாரத்தில் பிரதி அமைச்சர் முதுஹெட்டிக்குப் பிடி விராந்து பிறப்பிக்கப்பட்டிருந்த வேளைஅமைச்சர் தலைமறைவாகஇருக்கின்றார் எனவே அவரைக் கைது செய்ய முடியாதிருக்கின்றது  என்று பொலிஸ் காரணம் கூறியது.ஆனால் அமைச்சரோ  பொலிஸார் பார்த்திருக்ககாலி அரசியல் மேடையொன்றில் இசைபாடிக் கொண்டிருந்திருக்கின்றார் என்பதுதான் இதில் வேடிக்கையான செய்தி.

இரு தலைக் கொல்லி எறும்பு நிலையில் பைசர் முஸ்தபா!

பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா அரசியலிருந்து வெளியேறி மைத்திரியுடன் இணைவது தொடர்பாக முடிவு செய்தார். சந்திரிகாவையும் அவர் சந்தித்தார். பல முஸ்லிம் மகாண சபை உறுப்பினர்களையும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் விருந்து கொடுத்துப் தன்னுடன் வருமாறு பேசிப்பார்த்தார், ஆனால் எவரும் அவருடன் சேர்ந்து கட்சி தாவ முன்வரவில்லை. 

நிலமை அப்படி இருக்க முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தன்பக்கம் அதிகளவு வருவதை மைத்திரிக்கு நெருக்கடியைக் கொடுக்கும் என்று எதிர்பார்ப்பதால்பைசர் முஸ்தபா போன்ற மக்கள் செல்வாக்கில்லாத ஒருவருக்குத் தனது அணியில் இடம் கொடுப்பது தொடர்பாக தற்போது மைத்திரி தரப்பு ஆர்வமில்லாது இருக்கின்றது. 

பைசருக்கு பிடித்த கொப்பும் மில்லாது இருந்து கொப்புமில்லாத நிலையில் தற்போது அவர் சிங்கப்பூர் போயிருக்கின்றார். பைசர் முஸ்தபா கட்சி தாவல் முற்றிலும் அவருடைய அரசியல் நலன்களுக்கான முடிவே அல்லாது சமூகம் சார்ந்த முடிவல்ல என்பது எமது கருத்து.

No comments

Powered by Blogger.