சிங்கள - முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்தி, வாக்குகளை கொள்ளையடிக்க திட்டம் - அமைச்சர் ராஜித்த எச்சரிக்கை
(ஏ.ஏ.எம்.அன்ஸிர்)
(இலங்கை முஸ்லிம்களிடையே சிறந்த அரசியல்வாதியாக அடையாளம் காணப்பட்டிருப்பவர்களில் டாக்டர் ராஜித்த சேனாரத்தினவும் ஒருவர். தற்போது எதிரணியின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரான அவர் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியே இது)
உங்களை முஸ்லிம்களின் சகோதரன் என்று பரவலாக சொல்லுகின்றார்கள் அது உணமையா..?
ஆம், உண்மைத்தான்..!
எதிரணியின் பொது வேட்பளராக நிறுத்தப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேனவின் வெற்றி வாய்ப்புகள் எப்படியுள்ளது..?
நிச்சயமாக வெற்றி பேறுவோம். நாம் மட்டுமில்லை மஹிந்த ராஜபக்ஷவும் அவர் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி என்ற வகையில் அவருக்கும் தெரியும் தான் தோற்றுவிடுவோம் என்று. எனினும் அவர் எதிர்பார்க்காத தோல்வியை அடைவார். இத்தேர்தலில் நாம் மிகபெரிய வெற்றியை அடைவோம்.
இலங்கை வரலாற்றில் மிக அதிகளவு முஸ்லிம்கள் இம்முறை மைத்திரிக்கு வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து என்ன கூறவிரும்புகிறீர்கள்..?
முஸ்லிம்களுக்கு சிறந்த சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. சகல முஸ்லிம்களும் மைதிரிபால சிறிசேன அவர்களுக்கு தமது ஆதரவை தெரிவிப்பதுடன், மஹிந்த ராஜபக்ஷவிற்கும் தமது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.
விசேடமாக பாதுகாப்புச் செயாலாளர் சிலருடன் சேர்ந்து, ஆதரவு தெரிவித்து அவர்களுக்கு மானியம் வழங்கி அவர்களை கட்டியெழுப்பி அதனூடாக அவர்கள் முஸ்லிம் விரோத செயல்களுக்கு பயன்படுத்தப்படுகின்றனர். இந்தநிலையில் இச்சந்தர்ப்பத்திற்காக இலங்கை பூராகவும் சகல முஸ்லிம்களும் ஒன்றுசேர்ந்து, இவ்வரசாங்கத்தை தோற்கடிக்க உள்ளனர். எங்களுக்கு ஆதரவு வழங்குகின்றனர்.
மைதிரிபால சிறிசேனவின் அணியில் உள்ள முஸ்லிம் காங்கிரஸும், ஹெல உறுமயவும் முரண்படுவதாக கூறப்படுகிறதே. உண்மையா..?
எவ்விதமான முரண்பாடுகளும் இல்லை. முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் எனைய முஸ்லிம் கட்சிகள் தாம் இனப்பிரச்சினையை தற்போது பூதாகரமாக்கப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பும் இவ்வாறு கூறினார்கள்.
நாங்கள் இனவாதம் தொடர்பாக பிறகு கதைத்துக்கொள்வோம்.
பிரதான 5 கராணங்களுடன் சகல கட்சிகளும் எமக்கு ஆதவை தெரிவித்துள்ளன. அது போல் ஹெல உறுமய எங்களுடன் இணைந்திருப்பது ஜனநாயகம், நல்லாட்சி, சுகந்திரத்தை அடைவது என்ற காரணங்களுக்காகவே நாம் எல்லோரும் போராடுகின்றோம். நாட்டிற்கு ஜனநாயகமும், சுதந்திரமும் கிடைத்தால்தான் அந்தஅந்த இனங்களுக்கு ஜனநாயகமும் சுதந்திரமும் கிடைக்கும். இது பொது போராட்டம் இதற்கு அனைவரும் ஒன்றிணைந்து போராடுவது நாட்டிற்கு ஜனநாயகத்தை சுகந்திரத்தை பெற்று நல்லாட்சியை உருவாக்குவதற்கே ஆகும்.
சிங்கள - முஸ்லிம் இனக் கலவரமொன்றுக்கு திட்டமிடப்படுவதாக கூறப்படுகின்றதே..! அவ்வாறு செய்யமுடியுமா..??
ஆம், தற்போது பொது பலசேனா, ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிப்பதில் இருந்து இது தெரிகின்றது. இதை வழிநடத்தியது யாரென்று. பொதுபல சேனாவை பயன்படுத்தி பிரச்சினைகளை ஏற்படுத்தி பௌத்த சிங்கள வாக்குகளை கொள்ளையடிக்க திட்டமிடப்படுகிறது. இருந்தாலும் அவை தொடாபாக சிறந்த அவதானத்துடன் இருக்கின்றோம்.
தமிழ், முஸ்லிம் கட்சிகள் மைதிரியுடன் இணந்திருப்பது, பௌத்த சிங்கள வாக்குகள், மஹிந்த ராஜபக்ஸவிடம் போய் சேருவதற்கு வழிவகுக்குமென நம்புகிறீர்களா..?
இல்லை, ஒருபோதும் இல்லை, சிங்கள பௌத மக்கள் சிறந்த புரிந்துணர்வுடன் உள்ளனர். சிங்கள பௌத்த மக்களுக்கு தெரியும் அவர்கள் முகம் கொடுத்துள்ள பிரச்சினையை, இந்நாட்டில் அவர்கள் பௌத்தவாதத்தை கதைத்து ராஜபக்ஷ குடும்பம் கொண்டு சொல்லும் சூறையாடல் திட்டங்கள் தொடாபாக சிறந்த புரிந்தணர்வுடன் உள்ளனர். அதனால் பெரும்வாரியான பௌத்த வாக்குகளால் மைதிரிபால சிறிசேன முன்னிலையில் உள்ளார்.
பொலன்நறுவையில் பொதுபல சேனா - பிரதேச மக்கள் மோதிக்கொண்ட சம்பவம் தொடர்பாக என்ன சொல்ல விரும்புகின்றீர்கள். அது மைதிரி யுகத்தின் ஆரம்பம் என நினைக்கின்றீர்களா..?
அரசியலில் பிரச்சினை ஏற்படுவது சகஜம். அது எங்களுக்கு தெரிந்து நடப்பதில்லை. அவை உண்மையிலேயே அரச பலத்தை கொண்ட அந்த இயக்கம் தான் (பொதுபல சேனா) ஆரம்பம் செய்தது, அதற்கு பதில்தான் பொலன்நறுவையில் நடந்தது.
முஸ்லிம்களின் சகோதரன் என்ற வகையில், இறுதியாக முஸ்லிம்களுக்கு கொடுக்கும் தகவல் என்ன..?
முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல இந்நாட்டில் மனஅழுத்திற்கு உள்ளாகியுள்ள சாதி, மத, மற்றும் பொருளாதார, அரசியல் ரீதியாக மனஅழுத்தற்கு உள்ள அனைவருக்கும் இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்வது, சகலதையும் மறந்து மன அழுத்ததில் இருந்து விடுபட்டு சுகந்திர நாட்டின் ஜனநாயக அரசாங்கத்தின் கீழ் வாழ்வதற்கு எம்முடன் இணைந்துக்கொள்ளுங்கள் என்பதேயாகும்.
உதவி - சியாஹுல் ஹசன்

Masha allah. very nice and meaning-full article.
ReplyDeleteMay allah bless our country from this oppressing govt.allah only can help us.also will give good lesson fot them.innallaha maal maakireen.
ReplyDeleteரா ஜித வுக்கு அல்லாஹ் ஹிதாயத்தை கொடுப்பானாக ஆமீன்
ReplyDeleteஅன்பின் இஸ்லாமிய சகோதரர்களுக்கு
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்
சிங்கள , முஸ்லிம் கலவரங்களை அரச எதிர்ப்பாளர்கள் சிலர் எதிர்பார்க்கின்றார்கள் அதில் முதலாமவராக ரவூப் ஹகீம் காணப்படுகின்றார் .ஏனெனில் அப்போது தான் முஸ்லிம் காங்கிரசுக்கு அதிக உறுப்பினர்களை சேர்த்துக்கொள்ளலாம் என்பது அவரது எதிர்பார்ப்பு .
அளுத்கம தர்கா நகர் கலவரத்தின்போது எம்முடன் நின்று தோல் கொடுத்தவர் தான் நீங்கள். தங்களுக்கும் பாலித தேவபெரும அவர்களுக்கும் என்றும் நன்றியுடையவர்களாக இருப்போம்.
ReplyDeleteசுருக்கமான உண்மை என்னவென்றால்.
ReplyDeleteமுஸ்லிம்களை வைத்து இனவாத அரசியல் செய்த ராஜபக்ச குடும்பத்தினரை தோற்கடிக்கவைத்துள்ளோம் இது முஸ்லிம்களால் தோற்கடிக்கப்பட்டுள்ளது என்பது வரலாற்றில் பதிவாகவேண்டும் அதன் மூலம் முஸ்லிம்களுக்கு எதிராகச்செயல்படுவதை தவிர்த்து சிறுபானமையினரை அரவணைக்காமல் வெற்றிபெற பெரும்பான்மையினராலும் முடியாது என்பதை நிலை நாட்டக்கூடியதொரு தேர்தல்தான் இந்த முறை நாம் வாக்கழிக்கபோவது ஆகவே நேரகாலத்துடன் வாக்குச்சாவடிக்குச்சென்று உமது பொன்னான வாக்குகளை மகிந்த அரசாங்கத்திற்கு எதிராக அழிக்கவேண்டுகின்றோம். அத்துடன் மிக முக்கியமாக இவ்வரசாங்கம் தோற்கடிக்கப்படவேண்டுமென்று மீதமுள்ள நாடகளில் முஸ்லிம்கள் அனைவரும் தூஆச்செய்யுங்கள். அனியாயக்காரர்களுக்கு எதிராக அல்லாஹ் எம்மை பாதுக்காக்கவேண்டும்.