Header Ads



மஹிந்த ராஜபக்வுக்கு ஆதரவு திரட்டுவது தொடர்பாக, உலமாக்களுடன் ஹிஸ்புல்லாஹ் சந்திப்பு

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

2015 ஜனாதிபதி தேர்தலில்  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணயின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு திரட்டும் முகமாக காத்தான்குடி பிரதேசத்திலுள்ள உலமாக்களுக்கும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு மிடையிலான விஷேட சந்திப்பொன்று காத்தான்குடியில் 17-12-2014 புதன்கிழமை இரவு நடைபெற்றது.

இதன் போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இப்  பிரதேச முஸ்லிம்கள் எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

இங்கு முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால நலனிற்கு உதவக் கூடிய வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அடையப்போகும் வெற்றியில் பங்குதாரர்களாக முஸ்லிம் சமூகம் மாற முடியுமென பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.


3 comments:

  1. முஸ்லிம்கள் இந்த MR & Co வினால் பட்ட துன்பங்களையும், உடைக்கப்பட்ட பள்ளிவாசல்களின் எண்ணிக்கையையும் கணக்கிலெடுக்காது MR & Co க்கு ஆதரவு திரட்டுவது சுயநலத்தின் உச்சக்கட்ட செயல்பாடு என்பது காத்தனூர் மக்களுக்கு தெரியாத ஒன்றல்ல. படைத்தவனுக்கு பதில் சொல்ல வேண்டி வரும் !

    ReplyDelete
  2. Mr Bull don't try to sell the muslim umma

    ReplyDelete
  3. காத்தான்குடி மக்கள் சத்தியத்தின் பாதையில் உள்ளவர்கள் என்பதனை நீங்கள் இன்சா அல்லா எதிர்வரும் 8ம் திகதி புரிந்துகொள்ளுவீர்கள்

    ReplyDelete

Powered by Blogger.